கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்க்கநடவடிக்கைஅமைச்சர் இ.பெரியசாமிகூட்டுறவுத்துறையின் குறித்து ஆய்வு
-------
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமிதலைமையில்,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.சு.முத்துசாமிமுன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், சென்னை ஆ.சண்முகசுந்தரம், அந்தியூர் சட்டமன்றஉறுப்பினர்ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அமைச்சர் ஆகியோர் தெரிவித்ததாவது,
முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்ற வேளாண் சார்ந்த நலத்திட்டங்களை தீட்டி, வேளாண் பெருமக்கள் பயன்பெறுகின்ற வகையில், அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அனைத்துத்தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பல்வேறு கடன் வசதிகளை அளித்தும், சிறு, குறு விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்குரிய சேவைகளாற்றி மகத்தான சாதனையினை தமிழக அரசு புரிந்து வருகிறது.
கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறையின் சார்பில் அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். சங்கத்தை நாடி வருபவர்களை கட்டாயம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். சுதந்திரமாக அனைத்து மக்களும் இடம்பெற கூடிய அமைப்பு கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதே மக்களின் பங்குகளால் உருவாக்கப்பட்டு பண்டக சாலையாக இருந்தாலும், கடன் சங்கமாக இருந்தாலும் அதனுடைய நிதியை பெற்று இயங்குவற்கு மிக உயர்ந்த நோக்கத்துடன் இக்கூட்டுறவுத்துறைஉருவாக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இணைப்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுக்கள் அவர்களுக்கு அச்சடித்து வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு வெளிப்படையான எந்தவொருவருக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அனைவருக்கும் அனைத்தையும் வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் தான் அரசை உருவாக்கியுள்ளார்கள்.
18 வயது நிரம்பிய அனைவரும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் ஆகலாம். அதேபோல அதிகபடியான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் மகளிருக்கு கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுய உதவிக்குழுக்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு வணிகர்கள், மாற்றுத்திறாளிகள் என அனைவருக்கும் கட்டாயம் கடனுதவிகளை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கமானது பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுகின்ற மையமாக திகழ்கிறது. விவசாய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவாக உறுப்பினர்களை சேர்த்து அனைத்து தரப்பு மக்களும் அங்கம் வகிக்கும் சங்கமாக மாற்றப்பட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பயிர்கடன் தள்ளுபடியில் 50 சதவீத நபர்களுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உள்ள விதிமுறைகளை அலுவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
2020-2021 ஆம் நிதியாண்டில் பயிர்க்கடன் குறியீடு ரூ.745 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதில் 665.16 விவசாயிகளுக்கு ரூ.742.52 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு சாதனை 100 சதவீதம் எய்தப்பட்டுள்ளது. மேலும், 2021-2022 நிதியாண்டில் பயிர்க்கடன், 01.04.2021 முதல் 26.07.2021 வரை 1456 விவசாயிகளுக்கு ரூ.15.32 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 301 புதிய உறுப்பினர்களுக்கு 2.92 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் தொழில்முனைவோர் திறனை ஊக்குவித்து அவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற தொழில் முனைவோர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பணிபுரியும் மகளிர் குடும்ப தேவைக்காக 2 மகளிருக்கு ரூ.4.25 இலட்சம் சம்பளக் கடன்களும், மகளிர் சுயதொழில் செய்து மேம்பட 1 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.9.35 இலட்சம் அளவிற்கு கடன்களும், ஈரோடு மண்டலத்தில் வீட்டு வசதி மற்றும் வீட்டு அடமானக்கடன்களாக 44 நபர்களுக்கு ரூ.257.28 இலட்சம் கடனும், மக்களின் அவசரத்தேவைகளுக்கு நகைக்கடன்களாக 5,339 நபர்களுக்கு ரூ.37.96 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
சிறுதொழில் மேற்கொள்ளவும், சிறு போக்குவரத்து வாகனங்கள் இயக்கவும், 49 நபர்களுக்கு பண்ணைச்சாராக் கடன்களாக ரூ.1.07 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்கும் வகையில் தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மண்டலத்தில் 30.06.2021 வரை 130 விவசாயிகளுக்கு ரூ.4.35 கோடி கடனாகவழங்கப்பட்டுள்ளது.
சிறுவணிகர்களின் வியாபார நடவடிக்கைகள் மேம்படுத்தும் வகையில், 246 நபர்களுக்கு ரூ.78.80 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டு, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 838 விவசாயிகளிடமிருந்து ரூ.49.26 இலட்சம் பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சேவை மையம் விவசாய வேலையாட்கள் பற்றாக்குறையினைக் களைய 36 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.1.12 கோடி அரசு மானியத்தில் ரூ.2.85 கோடி மதிப்பில் உழவு இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம், மினி டிராக்டர், பயிர் நடவு இயந்திரம், போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் மரக்கருவிகளுடன் வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகக்குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
Информация по комментариям в разработке