எதையும் நிபுணரைப் போல் கற்றுக்கொள்ளுங்கள், அறிவியல் அடிப்படையிலான நுட்பங்களுடன். | Learn Like a Pro

Описание к видео எதையும் நிபுணரைப் போல் கற்றுக்கொள்ளுங்கள், அறிவியல் அடிப்படையிலான நுட்பங்களுடன். | Learn Like a Pro

To buy the book: https://amzn.to/3DTZqh6
Watch my video on Pomodoro Technique:    • How to Make [New Year] Resolutions Work?  
Watch my video on why physical exercise is the breakfast for the brain:    • Why and HOW I keep this habit for 20+...  


00:00 இது என்ன நூல்? எழுதினவங்க யாரு?
01:40 கவனம் சிதறாம படிக்கறது எப்படி?
02:37 ஏன் மல்ட்டி-டாஸ்கிங் பண்ணக்கூடாது?
04:01 ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?
06:30 வேலையைத் தள்ளிப்போடுவதை எப்படி நிறுத்துவது?
07:03 தெளிவுடன் பயிற்சி செய்வது எப்படி?
08:10 எப்படிப் படிக்கிறோம் என்பதை சிந்திப்பது எப்படி?

எனக்கும் பார்பராவுக்கும் பல ஒற்றுமைகள். என்னைப்போலவே அவரும் பள்ளியிலும் கல்லூரியிலும் அறிவியல் கணக்கு பாடங்களில் திண்டாடியிருக்கிறார்.

அவர் காலேஜை விட்டே நின்றுவிட்டார். ஆனால், பின்னாளில் படிப்பது எப்படி என்கிற வித்தையைக் கண்டுகொண்டார். இன்ஜினீயரிங், பல மொழிகள் என்று புகுந்து விளையாடினார். அட, இப்படித்தான் படிக்கணுமா என்று சிரித்தார்.

தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதையே முனைப்பாகச் செய்கிறார். அதுவும் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உத்திகளுடன். உலகில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட இணைய வகுப்பு, ‘படிப்பது எப்படி?’ என்னும் பார்பராவின் வகுப்பு தான். ‘இது ஒன்னும் கடினமான விஷயம் இல்லை, புரிஞ்சிக்கிட்டா சுலபம் தான்’ என்கிற ஆறுதலான உற்சாகமூட்டும் அணுகுமுறை கொண்டவர்.

பார்பரா ஓக்லியின் நூல்களை நான் படித்திருக்கிறேன். சமீபத்தில் அவரது லேட்டஸ்ட் நூலையும் படித்தேன். கற்றுக்கொள்வதில் பல லெவெல்கள் உண்டு. ‘ஒரு நிபுணரைப் போலக் கற்றுக்கொள்ளுங்கள்: எதையும் சிறப்பாகச் செய்ய அறிவியல் அடிப்படையிலான கருவிகள்’ என்று அழைக்கிறது இந்த நூல். (Learn Like a Pro: Science-Based Tools to Become Better at Anything)

புதிய விஷயங்கள் எதைக் கற்றுக்கொள்வதானாலும் கஷ்டமாக இருக்கிறதா? முன்னைப்போல உங்கள் மூளை எதையும் நினைவில் வைக்க மாட்டேன்கிறது என்று தோன்றுகிறதா? எவ்வளவு படித்தாலும் சில விஷயங்கள் புரியமாட்டேன்கிறது என்று எரிச்சல் வருகிறதா? — அப்படியானால் நீங்கள் தனியாக இல்லை. இந்த விரக்தியை நம்மில் பலர் அனுபவிக்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாக பார்பராவின் ‘ஒரு நிபுணரைப் போலக் கற்றுக்கொள்ளுங்கள்’ நூலில் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உத்திகள் இருக்கின்றன. அவற்றை நான் சுருக்கமாக இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன். நூல் பற்றிய தவகல்களும் கொடுத்திருக்கிறேன்.

கற்றல் ஒரு போர். கற்றல் ஒரு தலைவலி. கற்றல் ஒரு ஆனந்தம். இவை எல்லாமே உண்மை. நாம் எந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

பாருங்கள்:
“அறிவியல் அடிப்படையிலான நுட்பங்களுடன், எதையும் நிபுணரைப் போல் கற்றுக்கொள்ளுங்கள்”

(இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ‘மறக்காதீர்கள்!’ 😉)

***
🌐📷💙🦜👔📽️ https://bio.link/dharan
***

நான் யார்?
🌳 ஸ்ரீதரன். சென்னை.
👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). எனவே, நாடோடி.
📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி/சைக்கிள் பயணம் பற்றி 5 நூல்களின் ஆசிரியர்.

Music Vlad Gluschenko - Autumn Walk - Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0

Комментарии

Информация по комментариям в разработке