கற்றல் குறைபாடு என்றால் என்ன? எப்படிச்சரி செய்ய முடியும்?

Описание к видео கற்றல் குறைபாடு என்றால் என்ன? எப்படிச்சரி செய்ய முடியும்?

கற்றல் என்பது ஐம்புலன்களின் செயல்பாடு உடல் மற்றும் நுட்பதசை இயக்கம் , நினைவுகள் ,அனுபவங்கள் புத்தக அறிவு ,வாழ்வின் ஆதார செயல்கள் இவைகளை மூளையின் பல்வேறு பகுதிகள் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து இயைந்துசெயல்பட்டால் கல்வி கற்றல் நடைபெறுகிறது.1450 கிராம் எடையுள்ள மனித மூளையானது மற்ற பாலூட்டிகளின் இடைக்கிடை மூளையின் அளவை விட அதிகமானது இரு கூறாகப் பிளவுபட்டு அடர்ந்த மடிப்புகளில் உள்ளடங்கிய நரம்புத் திசுக்கள் தான் கற்றலின் அடிப்படையாகும். மூளைத் திசுக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டணிகள் கோடான கோடி உணர்வுத் சொற்கள் இயக்கத்தை சொற்கள் கிடைத்த சொற்கள் இவைகளின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு நம் கற்றலை வளர்க்கின்றன வேதிப்பொருட்களின் மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது பரவும் புலப்படாத மின் சக்தியின் மூலம் தான் அறிவு வளர்ச்சி சாத்தியமாகிறது
உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பு தன் குழந்தை நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பம் சமுதாய வாழ்வு பெற வேண்டும் என்பதே இதற்கு ஆதாரமாக அடிநாதமாக விளங்குவது கல்வி ஒரு பிறப்பில் தான் பெற்ற கல்வியை எழுபிறப்பும் ஏமாப்பு உடைத்து என்பது திருக்குறள் கற்றவர்கள் கல்லாதவர்கள் உடைய வாழ்க்கைமுறை பொருளாதார சூழல் அனைவரும் அறிந்ததே எனவே ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும் தன்னைவிட புத்திசாலியாக நன்கு படைத்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் இதை கண்டறியவே பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளை கூறியதாக அடையாளமாக எடுத்துக் கொள்கிறார்கள் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றாலும் அல்லது வகுப்பில் முதல் பத்துக்குள் தகுதி பெறவில்லை என்றாலும் பெற்றோர்களுக்கு கோபம் சலிப்பு ஏற்படுகிறது நீ கணக்கில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை எனவே உனது தகுதி 25க்கு தள்ளப்பட்டுவிட்டது முட்டாள் என்கிறார் அம்மா. நிறைய எழுத்துப்பிழை செய்கிறாய் தமிழில் கூட எழுத தெரியாதா தற்குறி போல் இருக்கிறாயே உனக்கு படிப்பில் அக்கறை இல்லை என்று கடிந்து கொள்கிறார் தமிழாசிரியர் உன் கையெழுத்து மோசம்டேய் உனக்கு தகராறு என்று சொல்லத் தெரியாதா தகறாறு தகராறு என்று சொல்கிறாய் எங்கே சொல்லு பார்ப்போம் ?'மலையில ஒரு உரல் உருளுது" எங்கே வேகமாக சொல்லு! பார்ப்போம்!! என்று கேலி செய்கிறார்கள் நண்பர்கள். உனக்கு விளையாட்டில் இருக்கும் கவனம் அக்கறை படிப்பில் இல்லை நீ குறும்பை கைவிட்டால் தான் உருப்படவே! என்று திட்டுகிறார் அப்பா. எத்தனை சிரமப்பட்டு படித்தும் ஆங்கிலத்தில் தகுதி மதிப்பெண்களை கூட வாங்க முடியவில்லை அதனாலேயே இந்த வருடம் தேர்வில் தோல்வியடையும் போலிருக்கே ஆண்டவனே சரியான வார்த்தைகள் தெரிந்தும் எழுத ரப்ப தவறாக எழுத தொலைச்சிட்டேன் எப்படியாவது முழு ஆண்டு தேர்வு தகுதி மதிப்பெண்கள் வாங்கி டனும் என்று மனம் நொந்து வேண்டும் மாணவர்கள்.
என்ன நடக்கிறது ஏன் ஒவ்வொரு வகுப்பிலும் பத்திலிருந்து இருபது சதவீதம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களை பெறுகிறார்கள் இந்த படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு என்ன பிரச்சனை இவர்கள் தங்கள் சோம்பேறித்தனத்தால் முட்டாள்தனம், பொறுப்பில்லாத தாலும் தான் குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதுதான் ஆசிரியர்களுடைய நம்பிக்கை.
எந்தக் குழந்தையும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூடம் மற்றும் வீட்டில் நல்ல மரியாதை அன்பு பாசம் நேசம் இவைகளை அனுபவிக்க வேண்டும் என்று தான் நினைக்கும் எனவேதான் பாடங்களை கற்பதில் பிரச்சனைகள் இருந்தாலோ அடிக்கடி குறைந்த மதிப்பெண்களை தேர்வில் பெற்றாலோ அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபடவேண்டும்
குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கு பார்வை குறைபாடு கேள்வி திறன் குறைவு மன உணர்ச்சி கோளாறுகள் அறிவுத்திறன் கோளாறு மூளை வளர்ச்சி குறைவு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக இருக்கலாம். காரணத்தை அறிந்து அதனை சரி செய்வது இந்த குழந்தைகளுக்கு கற்பது எளிதாக்கும்
ஆனால் சில குழந்தைகள் மேற்சொன்ன காரணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தாலும் மற்ற விஷயங்களில் புத்திசாலித்தனம் உடையவர்களாக இருந்தோம் குறிப்பிட்ட பாடங்களை கற்றுக்கொள்ளபோதுமான முயற்சிகளை மேற்கொண்டும் திரும்பத்திரும்ப மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெறுவார் இவ்வகையான குறைபாடு கற்றல் குறைபாடு எனப்படும் சில குழந்தைகளை இந்த கற்றல் குறைபாடு கல்விகற்க தொடங்கும்போதே தெரியவரும் மற்ற குழந்தைகளிடம் பின்னாளில் எட்டு 9வகுப்பு போகும்போது வெளிப்படலாம்.
எந்த காரணமும் இல்லாமல் குழந்தை தரிக்க முயற்சி செய்தும் கற்பதற்கு சரியான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்தும் கூட கற்க முடியவில்லை என்றால் அதற்கு கற்றல் குறை காரணமாக இருக்கலாம்

Комментарии

Информация по комментариям в разработке