கருட புராணமும்,நரக தண்டனைகளும்.! தண்டனை 12 : குற்றம் ( Thalavidhi )
கருட புராணமும்,நரக தண்டனைகளும்.!
“அந்நியன்” என்ற திரைப்படம் வருவதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலானோருக்கு கருட புராணம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. கருட புராணம் என்பது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும், கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இது விளக்குகிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அநித்தாமிஸ்ர நரகம்.!குற்றம்: கணவனும், மனைவியும் சேர்ந்து வாழாமல், ஒருவரை இருவர் ஏமாற்றுதல். கணவன், மனைவியை வஞ்சிப்பது, மனைவி, கணவனை வஞ்சிப்பது.தண்டனை: கண்கள் செயல் இழந்து, இருள் சூழ்ந்த இடத்தில தவிக்கவிடப்படுவர்கள்.
ரௌரவ நரகம்.!குற்றம்: பிறருடைய குடும்பத்திற்கு கேடு விளைத்தல், அழிப்பது, அடுத்தவர் பொருள்களை பறித்தல்.தண்டனை: சூலாயுதம் கொண்டு குத்தி துன்புறுத்துதல்.
மகா ரௌரவ நரகம்.!குற்றம்: மிகவும் கொடூரமாக பிறரது குடும்பங்களை வதைத்தல், பிரிப்பது, கேடு வேலைகளில் ஈடுபடுவது.தண்டனை: “குரு” என்ற கோரமான எம மிருகங்கள் பாவிகளை சூழ்ந்து, முட்டி மோதி பல வகைகளில் ரணகளப்படுத்தி துன்புறுத்து
காலகுத்திரம்.!குற்றம்: பெரியோர்களை, பெற்றோர்களை, அடித்து அவமதித்தல், பட்டினி போடுதல்தண்டனை: அதே முறையில், அடி, உதை, பட்டினி என்று வதைக்கபப்டுவார்கள்.
பன்றி முகம்.!குற்றம்: குற்றமற்றவர்களை தண்டித்தல், நீதிக்கு புறம்பாக அநீதிக்குத் துணை போதல்தண்டனை: பன்றி முகத்துடன், கூர்மையான பற்கள் உள்ள ஓர் மிருகத்தின் வாயல் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டனைப் பெறுவார்கள்.
அக்னிகுண்டம்.!குற்றம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும், செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.தண்டனை: பாவிகள், ஓர் நீண்ட தடியில் மிருகத்தைப் போல கைகால்கள் கட்டபப்ட்ட நிலையில் எரியும் அக்னிகுன்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்.!குற்றம்: சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்.தண்டனை: நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ பாவிகள் நிர்பந்திக்கப்படுவார்கள்.
சான்மலி.!குற்றம்: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவு முறையைக் கூடப் பாராமல் யாருடனாவது, எப்படியாவது கூடி மகிழ்தல்.தண்டனை: முள்ளால் ஆன தடிகளாலும், முட்செடிகளாலும் எம அரக்கர்கள் துன்புறுத்துவார்கள்.
தாமிஸிர நரகம்.!குற்றம்: பிறருக்கு சொந்தமான மனைவியை விரும்புதல் அல்லது அபகரிக்க நினைத்தல், பிறரது பொருளை அபகரித்தல்.தண்டனை: முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் அடிப்பார்கள்.
வைதரணி.!குற்றம்: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்திற்குப் புறம்பாக நடத்தல்.தண்டனை: வைதரணி என்ற இரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகளை விழவைத்து துன்புறுத்துவர்.
சாரமேயாதனம்.!குற்றம்: வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுக் குவித்தல்.தண்டனை: விசித்திரமானக் கொடிய மிருகங்களால் பாவிகள் வதைக்கப்படுவார்கள்.
Garuda Purana Punishments in Tamil lists the 28 Garuda Purana Punishments described in Garuda Puranam. Punishments of the Garuda Puranam are described as ‘The Torments of Yama’ as per the conversation between Lord Vishnu and Garuda. கருட புராணம் தண்டனைகள் - கருட புராணம் நரகங்கள் நான்கு லட்சங்கள் என்றும் அவற்றில் முக்கியமானவை இருபத்தியெட்டு என்று கூறுகின்றது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனைகளை இந்த பதிவில் தொகுத்துள்ளோம். #thalavidhi #garudapuranapunishments
About : Thala Vidhi is a YouTube Channel, where you will find Fascinating video presentations about Mysteries, World wonders, Facts, Aliens, Ghosts, Space etc. Its a complete infotainment channel which is created to give interesting and useful informative videos to the viewers with its unique topics and presentations in our Tamil language. We were uploading New videos daily, so do subscribe to our Thalavidhi Channel for latest updates.
For Any enquiries : [email protected]
Информация по комментариям в разработке