Bommai Chatiram Triplicane | Navarathri Golu Dolls 2024 🪆 | நவராத்திரி கொலு பொம்மைகள்

Описание к видео Bommai Chatiram Triplicane | Navarathri Golu Dolls 2024 🪆 | நவராத்திரி கொலு பொம்மைகள்

This video contains information about golu dolls which is manufactured from various parts of Tamilnadu mostly made from clay and also from paper mesh, is being sold at Bommai Chatiram near Sri Parthasarathy Swamy Temple Triplicane, just right side of the main entrance.

நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த முதல் 3 நாட்களும் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் துர்க்கைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கும். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் இப் பூஜைகள் நடக்கும்.

கடைசி 3 நாட்கள் சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதிக்கு பூஜைகள் செய்யப்படும். நவராத்திரி குறித்து கூறப்பட்டுவரும் புராணக் கதை: முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும்சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும்இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும்ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாகநடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர். ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன்.நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார். மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை.அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான். மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன்.அங்கு தொடங்கியது பிரச்சனை. மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர்.தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு. மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள்அம்பாள். தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும்,அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்காரபூஷிதையாய் புறப்பட்டாள். அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது.அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன். அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று. இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

#navarathri #goludolls #navarathridolls

Комментарии

Информация по комментариям в разработке