TAMIL OLD--Kanimozhi maathe paar(vMv)--RAAJAMBAL 1951

Описание к видео TAMIL OLD--Kanimozhi maathe paar(vMv)--RAAJAMBAL 1951

பழம்பெரும் இசையமைப்பாளர் எம் எஸ் ஞானமணி
****************************************************************
1940-50 களில் கலைத்துறையில் பிரகாசித்த, இசையில் சிறந்த ஞானம் கொண்ட,
பழம்பெரும் இசையமைப்பாளர் எம் எஸ் ஞானமணி அவர்களை பற்றி சரியான வாழ்க்கை குறிப்புகள் எதுவும் இல்லை ...

நாடக நடிகராக 30-களில் வாழ்க்கையை தொடங்கிய அவர் 1947-ல் 'மதனமாலா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்... அந்தப்படத்தின் இசைத்தட்டுகள் பழைய பாடல்களை பொக்கிசமாய் பாதுகாக்கும் அன்பர்கள் யாரிடமேனும் இருக்கக் கூடும்...

தொடர்ந்து அதே 1947 -ம் ஆண்டில் சி ஆர் சுப்பாராமனுடன் சேர்ந்து 'பைத்தியக்காரன்' படத்திற்கு இசை அமைத்தார்...
அந்தப்படத்தின் முக்கிய நடிகராக எம் ஜி ஆர் நடித்திருந்தார்...

தொடர்ந்து 1948-ல் 'தெய்வ நீதி' மற்றும் 'ஞான சௌந்தரி' படங்களுக்கு இசையமைத்தார்...

1950-ல் அவரின் இசையில் வெளிவந்த 'மருதநாட்டு இளவரசி' படம் இனிய பாடல்களால் நிறைந்து சிறந்த வெற்றியை பதிவு செய்தது... இதில் நாயக நாயகியாக 'எம் ஜி ஆர் - வி என் ஜானகி' நடித்திருந்தனர்

தொடர்ந்து ராஜாம்பாள் (1951), கலாவதி(1951), உலகம்(1952), நல்லவன்(1955), படங்களுக்கு தனியாகவும், அபலை அஞ்சுகம் (1959) படத்தில் கே வி மகாதேவனுடன் இணைந்தும் இசையமைத்தார் ...

அவர் இறுதியாக இசையமைத்த 'மகாவீரபீமன்' 1962-ல் வெளிவந்தது ...
இந்தப்படத்தில் சீர்காழி அவர்கள் பாடிய "காலைபோழுதே நமஸ்காரம்" பாடல் இன்றும்
'ஞானமணி' அவர்களின் இசைஞானத்தின் வரலாற்று சுவடுகளை சுமந்தபடி காற்றில் ஒலித்துகொண்டே இருக்கிறது...
என்றும் ஒலிக்கும்...

மொத்தம் பதினோரு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருந்தாலும்
அவர் இசையின் வீச்சு எண்ணிக்கையை தாண்டி பரந்து விரியவே செய்கிறது...
****************************************************************************************************

"கனிமொழி மாதே பார்"...
ராஜாம்பாள் (1951)
இசை : எம் எஸ் ஞானமணி
பாடலாசிரியர் : அ மருதகாசி
பாடியவர்கள் : ஏ எம் ராஜா & பி லீலா
பாடலுக்கான நடிப்பு : ஆர் எஸ் மனோகர் & பி கே சரஸ்வதி

இந்தப்படத்தில்தான் ஆர் எஸ் மனோகர் அவர்கள் அறிமுகமானார்...

[email protected]

Комментарии

Информация по комментариям в разработке