hanging coins making ganesha from disposable card paper and thirupugazh padalgal
#ganesha_status #ganapathisongs
#ganeshchaturthi #shreeganesh
#ganeshji ##ganeshfestival #ganeshbakti #ganeshutsav
#hanging #vinayagar
#pillayar #disposal #cardpacks
#papercraft #thirupugazh
#thirupugal #padalgal
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வர பெருமாளே.
கடலை பொரியவரை பலகனி கழை ... கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு
நுகர் கடின குட உதர ... இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,
விபரீத கரட தட மு(ம்)மத ... அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*
நளின சிறுநயன ... தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட
கரிணி முகவரது துணைவோனே ... யானைமுகத்தோருக்கு
இளையவனே,
வடவரையின் முகடு அதிர ... வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா ... ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,
மகபதி தருசுதை குறமினொடு ... தேவேந்திரனின் திருமகள்
தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும்,
இருவரு மருவு சரசவித மணவாளா ... இருவரையும் ஒருங்கே
தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே,
அடல் அசுரர்கள்குல முழுது மடிய ... வலிமை பொருந்திய
அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும்,
உயர்அமரர் சிறையைவிட ... உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும்,
எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரும் அயிலை ...
அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை
விடும் அரகர சரவண பவலோலா . செலுத்திய ஹரஹர
சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே,
இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகள்.
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல் கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை வின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்பு னைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி ருந்தவாறென்
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
உலகு போற்றி வெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கிரி நண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கி வுண்டவாழ்வே
முளரி பாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள் தம்பிரானே.
. எவ்வுயிர்க்கும்
பொதுவானதாகி, தனிப்பட்ட ம
பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப்
பொருளாகி,
அப்பொருளின்
முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி,
மறைவு யாதொன்றுமன்றி,
முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி,
எண்ணுவதற்கும்
முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து
புலன்களும் ஒடுங்கி அழிய,
மெய், வாய், கண்,
மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது
மரண பயத்தை நீக்கிய,
உனது அருள்
மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்?
கடல் ஓலமிடவும், அசுரர்கள்
போரொலி செய்யவும்,
உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை
மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை
வாய்ந்தவனே,
பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின்
தலைவனே, பார்வதியின் மகனே,
கார்த்திகைப்
பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே,
.தாமரை மீதும்,
திருப்பாற்கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும்
மூத்தவர்களாகிய அயன், அரி,
அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே.
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் . பெருமாளே
துதிக்கை உடைய, இளமை வாய்ந்த,
ஒளிமயமான,
யானைமுகமுடைய, வேதப்பொருளான
கற்பக* விநாயகனின்
இளைய சகோதரப் பெருமான் நீதான்.
கற்பரசி சிவகாமசுந்தரியும்,
நித்திய கல்யாணியுமான
பார்வதியின் தலைவரான
சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான்.
மழைத்துளி பெய்யும் மேகத்து
வண்ணனான இராமருக்கு மருமகனாகி
வெற்றி
வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான்.
. மலைகள் உள்ள
அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும்
வெற்றி மயிலை
வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான்.
அழகிய முகங்கள் ஆறும்,
முத்துமாலைகள் அணிந்த மார்பும்,
வேறு எந்தத் திசையிலும்
காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான்.
தித்திமிதி தீது என
தாளமிட்டு விளையாடுகின்ற
சித்திர அழகிய குமாரப்பெருமான்
நீதான்.
ன சுத்த வீரனே,
சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும்,
. சிறந்த கவியரசனாகியவனும்
ஆன பெருமான் நீதான்.
தூயவளான வள்ளியுடன்
அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி,
lசுத்த சிவஞான உருவான
பெருமாளே.
சிதம்பரத்தில் மேற்கு கோபுரத்தின் வாயிலில் வீற்றிருக்கும் கணபதிக்கு கற்பக
விநாயகர் எனப் பெயர்.
Информация по комментариям в разработке