Suzhi Potu | சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Описание к видео Suzhi Potu | சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

ஓர் ஆணை கன்றை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும்
வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு

Photo Images of Korttu Malai Pillayar Temple - Kuala Lumpur, Malaysia (அருள்மிகு கோர்ட்டு மலை பிள்ளையார் - கோலாலம்பூர், மலேசியா)

Комментарии

Информация по комментариям в разработке