பாக்கிஸ்தானில் இருக்கும் தமிழர் நாகரிகம் | Indus Valley Civilization | SangathamizhanTV

Описание к видео பாக்கிஸ்தானில் இருக்கும் தமிழர் நாகரிகம் | Indus Valley Civilization | SangathamizhanTV

பாக்கிஸ்தானில் இருக்கும் தமிழர் நாகரிகம் | Indus Valley Civilization | SangathamizhanTV

சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்னும் வாசித்து அறிய முடியவில்லை.

சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இது வரை வெளிப்படவில்லை. இங்கு பேசப் பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது.
மொஹெஞ்சதாரோ நகரின் ஒரு பகுதியைக் காட்டும், கணனி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தோற்றம்சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன. சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை.

ஆதாரங்கள்/புத்தகங்கள்:
1. Studies In Proto Indo Mediterranean Culture Vol I by Heras, H: https://archive.org/details/in.ernet....

2. Mohenjo Daro and the Indus Civilization Vol-i (1931) by Sir John Marshall: https://archive.org/details/in.ernet....

3. குமரிக்கண்டமா சுமேரியமா? பா.பிரபாகரன்: https://www.amazon.in/Kumarikandama-S...

#SangathamizhanTV #IVC #IndusValleyCivilization #சிந்துவெளிநாகரிகம்

***************************************************************************************
Join this channel to get access to perks:
   / @sangathamizhantv  

For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv  

Email ID: [email protected]

Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV

Follow me on Facebook Page:   / changatamizhan  

Комментарии

Информация по комментариям в разработке