பஞ்சபூத சிவத்தலங்கள் (நீர், நெருப்பு, காற்று, நிலம், மற்றும் ஆகாயம் ) | Pancha Bhoota Stalam

Описание к видео பஞ்சபூத சிவத்தலங்கள் (நீர், நெருப்பு, காற்று, நிலம், மற்றும் ஆகாயம் ) | Pancha Bhoota Stalam

பஞ்சபூதத் தலங்கள் என்பவை நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாdகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ சிலவனவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.

பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
1. கோவில் பெயர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். குறிக்கும் பூதம் நிலம். லிங்கத்தின் பெயர் பிருத்வி லிங்கம். இடம் காஞ்சிபுரம்.

2. கோவில் பெயர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். குறிக்கும் பூதம் நெருப்பு. லிங்கத்தின் பெயர் அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம். இடம் திருவண்ணாமலை.

3. கோவில் பெயர் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்[. குறிக்கும் பூதம் நீர். லிங்கத்தின் பெயர் அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம். இடம் திருச்சி.


4. கோவில் பெயர் சிதம்பரம் நடராசர் கோயில். குறிக்கும் பூதம் ஆகாயம். லிங்கத்தின் பெயர் ஆகாச லிங்கம். இடம் சிதம்பரம்.



5. கோவில் பெயர் திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில். குறிக்கும் பூதம் காற்று. லிங்கத்தின் பெயர் வாயு லிங்கம். இடம் திருக்காளத்தி ஆந்திரப் பிரதேசம்.


வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர். இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்.

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று.

Комментарии

Информация по комментариям в разработке