Sekkizhar Peruman Varalaru | சேக்கிழார் பெருமான் வரலாறு |

Описание к видео Sekkizhar Peruman Varalaru | சேக்கிழார் பெருமான் வரலாறு |

#Sekkizhar Peruman Varalaru #சேக்கிழார் பெருமான்
வரலாறு #Sekkizhar Varalaru #Sekkizhar Puranam #Sivan #Shivan #Natarajar # Periyapuranam # Sozhan # Solan # Cholan #Kanikrish’s Vlog

Links for our Previous Videos…

Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் |    • Thiruvalam Sivan Temple | திருவலம் சி...  
Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 |    • Virinchipuram Sivan Temple 1 | விரிஞ்...  
Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |
   • Virinchipuram Sivan Temple 2 | விரிஞ்...  
Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |
   • Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் |...  
eladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|
   • Veladum Thanigai Malai| வேலாடும் தணிக...  
Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |
   • Pallikonda Perumal Temple | பள்ளிகொண்...  
Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை வாழ் அந்தணர்கள் வரலாறு| Naayanmar Varalaru|
   • Thillai Vaazh Andhanargal Varalaru| த...  
Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வரலாறு | Manivaasagar Varalaru | மணிவாசகர் வரலாறு |
   • Manikkavasagar Varalaru | மாணிக்கவாசக...  
Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு |

   • Nambiyandar Nambi Varalaru | நம்பியாண...  


சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.


பெயர்க்காரணம்

சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.[சான்று தேவை]
வரலாறு

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.
பிறப்பு

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்.[1] இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.[1]
இளமைப் பருவம்

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.
அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.

மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

Комментарии

Информация по комментариям в разработке