Vinayaka Chaturthi Celebration Mudumalai

Описание к видео Vinayaka Chaturthi Celebration Mudumalai

நீலகிரி மாவட்டம் முதுமலையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா.



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தில் நூற்றாண்டு பழமையான தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் உள்ளது ‌.


தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் 27 யானைகள் உள்ளன.
இந்த யானைகளில் 16 யானைகள் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக முகாமில் உள்ள அனைத்து யானைகளும் நீராடிய பின்பு பல்வேறு வண்ணங்களை கொண்ட மலர்களால் அலங்கரிக்கபட்டன.


யானைகளின் முகம் துதிக்கை ஆகியவளில் பல்வேறு வண்ணங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.


முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் கிருஷ்ணா என்ற ஆண் யானை விநாயகருக்கு மணி அடித்து ஆரத்தி எடுத்து வணக்கம் செலுத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை துவக்கி வைத்தது.



முகாமில் உள்ள அனைத்து யானை களும் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்கவைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை துவக்கி வைத்த பின் அனைத்து யானைகளும் பிளிரி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.


இந்த நிகழ்வை காண நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்திருந்து யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து மகிழ்ந்ததை கண்டு வியந்தனர்.

விழாவை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பான உணவு பிரசாதம் பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டன.


விழாக்கான ஏற்பாடுகளை முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் செய்தனர்

Комментарии

Информация по комментариям в разработке