பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் | PM Modi Visit Pakistan | Islamabad | SCO Meet

Описание к видео பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் | PM Modi Visit Pakistan | Islamabad | SCO Meet

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோக் கூறியதாவது;

அக்டோபர் 15, 16 தேதிகளில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு வருவதை பல நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன.

பங்கேற்கும் நாடுகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றால், 2015க்கு பின் பாகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

ஆனால் மோடியின் இந்த பயணம் குறித்து நமது அரசு தரப்பில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக ஜூலையில் கஜகஸ்தானில் நடந்த இந்த மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை.

மோடி ரஷ்ய பயணத்துக்கு திட்டமிட்டு இருந்ததால் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கூட்டத்துக்கு சென்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு SCO ( Shanghai Cooperation Organisation) என்பது 2001ல் சீனாவால் உருவாக்கப்பட்டது.# #PMModi #Pakistan | #Islamabad | #SCOMeet

Комментарии

Информация по комментариям в разработке