காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [12.09.2024]

Описание к видео காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [12.09.2024]

1) கலாச்சாரத்தையும் செழிப்பையும் இணைப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது- ஆசியா - பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்.
**** ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்தும் தில்லி பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றம்

2) மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு பொது மக்கள் நாளை அஞ்சலி செலுத்த ஏற்பாடு - கட்சி தலைமை அலுவலகத்தில் உடல் வைக்கப்படும் என அறிவிப்பு

3) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு காப்பீடு - ஒரு வாரத்தில் செயல்பாட்டிற்கு வருவதால் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்

4) அனைத்து ஜி எஸ் டி வரிவிகிதங்கள் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக ஜி எஸ் டி கவுன்சிலே முடிவு செய்யும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.

5) நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் மேம்படுத்தப்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க RGBSI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - சிகாகோவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கைய‍ெழுத்து

6) உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும்- கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தல்

7) தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் சிப் போட்டி- ஒரே நாளில் 9 தங்கப்பதக்கங்ளை குவித்தது இந்தியா

Комментарии

Информация по комментариям в разработке