பத்து ரூபாய் சாப்பாட்டுக் கடை மலிவான விலையில் வயிறார வெளுத்துகட்ட - Salem
வாங்க சாப்பிடலாம் பத்து ரூபாய் சாப்பாட்டுக் கடை
உங்கள் வாழ்வின் முக்கியமான சிறப்பு நாட்களை பத்து ரூபாய் சாப்பாட்டு கடையுடன் இணைந்து பசியுடன் இருப்பவர்கள் பசி போக்கி பசி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் ...
வாங்க சாப்பிடலாம் உணவு வகைகள்:
காளான் பிரியாணி
விஜிடபுள் பிரியாணி
தக்காளி சாதம்
தட்டைப் பயிறு குழம்பு சாதம்
கறுப்பு பீன்ஸ் குழம்பு சாதம்
சாம்பார் சாதம்
பீட்ருட் சாதம்
கேரட் சாதம்
முட்டைகோஸ் சாதம்
புதினா சாதம்
கொத்த மல்லி சாதம்
லெமன் சாதம்
தயிர் சாதம்
புளி சாதம்
தேங்காய் சாதம்
கத்திரிக்காய் சாதம் கீரை சாதம்
ரசம் சாதம்.
சின்ன சின்ன போண்டா, மசாலா வடை, முட்டை மசாலா கிடைக்கும்.
என ஒவ்வொரு நாளும் விதவிதமான ஐந்து வகை சாப்பாடுகள் தினமும் மதியம் 12மணி முதல் 3மணி வரை 300இல் இருந்து 350க்கும் மேற்ப்பட்ட மக்கள் வந்து சாப்பிட்டு விட்டு பார்சல் வாங்கியும் செல்கின்றனர், தினசரி ஐந்து வகையான கலவை சாதங்கள் நல்ல தரமான பொருட்களைக் கொண்டு ருசியாக தயாரித்து ஒரு சாதம் வெறும் பத்து ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.
அதே சமயத்தில் வாங்க சாப்பிடலாம் பத்து ரூபாய் சாப்பாட்டுக் கடையில் தங்கள் பிறந்த நாள், திருமண நாள், போன்ற விசேஷங்களில் எளிய மக்களுக்கு சாப்பாடு தர விரும்பினால், அவர்கள் ஸ்பான்சர் செய்யும் தொகைகளுக்கு ஏற்ப வடை பாயாசம், முட்டை மசால் போண்டா வடை ஆகியவற்றை சுட சுட தயாரித்து, பத்து ரூபாய் டோக்கன் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு கலவை சாதங்கள் அத்துடன் போண்டா சேமியாபாயாசம் என உங்களுக்கு விருப்பமான உணவு அதாவது பெற்றோர் நினைவு நாள் அன்று அவர்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் முன்கூட்டியே என்ன சாப்பாடு சொன்னாலும் அதுவும் செய்து தருவார்கள் மக்களுக்கு.
அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சாப்பாடுகளை வழங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் வேர்வை சிந்த உழைக்கும் உழைப்பாளிகள் வயிறையும் மனதையும் குளிர வைக்கிறார்.
பொதுவாக தொழிலாளர்கள் காசு கொடுத்து தான் சாப்பிட வேண்டும் என்று எண்ணுபவர்கள் அன்னதானத்தை விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களிடம் ஒரு பத்து ரூபாய் பெற்றுக் கொண்டு நண்பர்கள் ஸ்பான்சர் செய்யும் தொகையில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவைகளில் சாப்பாடு பலகாரங்கள் செய்து அவர்களுக்கு பெரும் பத்து ரூபாய்க்கு வழங்கி வருவதால்
சாப்பிடுபவரும், நன்கொடை வழங்கியவர்களும் என இரு தரப்பினரும் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர்.
இடம்: நரசிம்மன் சாலை, சித்திர காளியம்மன் கோவில் அருகில், சண்முகா பஸ் ஸ்டாப் எதிரில், ஹவுசிங் போர்டு எதிரில், செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
அன்னதானம் மற்றும் மேலும் விவரம் தெரிய 9087873789 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
அருமையான இந்த அன்னதானம் முயற்சியை செய்து வரும் மோனி ரவி அண்ணன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது துணைவி விஜயலட்சுமி அவர்களும்,
வாங்க சாப்பிடலாம் பத்து ரூபாய் சாப்பாட்டுக் கடை அறக்கட்டளை முலம் ஒரு குழுவாக நடத்துகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் வாங்க சாப்பிடலாம் பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடை ஒரு ஓட்டலில் எந்த அளவுக்கு தரமாக இருக்குமோ அந்த அளவுக்கு ஆரோக்யமான உணவு, சேலத்தில் மதியம் பசியோடு இருப்பவர்கள் குறைந்தபட்சம் பத்து ரூபாய் இருந்தால் போதும் 10 ரூபாய் சாப்பாடு கடைக்கு பசியாற வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வரலாம்.
For Advertisement & Sponsor:
Email: [email protected]
Website : https://www.southindiancuisines.com/
South Indian Food YouTube:
► https://www.youtube.com/SouthIndianFo...
South Indian Food Instagram:
► / southindiansfoods
South Indian Food Facebook:
► / southindianfood
Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
bun masala, street food salem, salem food, channa masala, egg masala, evening street food Salem,Onion Set,Poondu Set,tomato set,Norukal,food review,food vlogs,South Indian Street Food,thattu vadai set,norukkal,samosa,Thattu vadai #india #southindianfood #streetfood #food #viralvideo #indianfood 10 rupee Sapadu Kadai
Информация по комментариям в разработке