Oru Nathiyin Peyaroodu - Kadhal Kaditham | Vithuprathapan | Udhayan | Vaseeharan

Описание к видео Oru Nathiyin Peyaroodu - Kadhal Kaditham | Vithuprathapan | Udhayan | Vaseeharan

#KadhalKaditham #Vithuprathapan #Vaseeharan
என் பாடல்கள் | பாடல் 07 | ஓரு நதியின் பெயரோடு

தமிழ்சினிமாவில் அன்றும் இன்றும் காதல் பாடல்களுக்குப் பஞ்சமில்லை.
எத்தனை வகையான காதல் பாடலைகளை இந்த வாழ்நாள் முழுவதும் காதோரம் கேட்டிருப்போம்.  இன்னமும் "காதலே காதலே"  என்று உருக உருக 
கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
நீங்கள் காதலித்துக்கொண்டு இருக்கும் போதும், காதலிக்காமல் இருந்த போதும் காதல் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள்.  காதலிக்கும் நேரங்களில் காதல் பாடல்கள் ஒவ்வொன்றும் செவிகளில் தேனினை ஊற்றுவதைப்  போல இனிக்கும். அத்தகைய பாடல்கள் சோகமாக இருந்தாலும், சுகமாக இருந்தாலும் திகட்டாத பாடல்கள் இசையோடு இதயத்தில் இறங்கிவிடும்.
அதுபோன்ற ஒரு பாடலை என்னவளுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். 

சூழ்நிலை: அவள் ஓர் நதியின் பெயரோடு பிறந்தவள். அந்தக் காதல் நதியின் நினைவுகளில் நீந்தும் பொழுது பன்னீர்ப் பூக்களும் தூவப்படும் , சிலநேரம் அவை தீப்பொறிகளாகவும் வீசப்படும். எது வீசப்பட்டாலும் அவனுக்கு அது காதல் மழைதான். அந்த மழையில் நனைகையில் எழுதும் கவிதைகள் பாடலாக மாறும்.  அப்படி அவளைப் பற்றி  அவளுக்காக அவன் எழுதிய பாடல்.

பல்லவி
ஓரு நதியின் பெயரோடு பிறந்தவளே
பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே
உன் உயிராலே என்னைத் திறந்தவளே
என் உயிரோடு வந்து கலந்தவளே.

என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்
ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்
காதலா...காதலா... காதலா...
காதலா...காதலா...காதலா...

சரணம் - 1
கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை
புதுமெட்டு போடுகிறாய்
மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை
தீயினை மூட்டுகிறாய்
தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ
பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்
தினம் தோறும் கவி பூக்கும்
இசைவந்து தேன் வார்க்கும்!
நீயின்றி என் வாழ்வு இல்லையே!

சரணம்- 2
தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்
தினம் தினம் குதிக்கின்றாய்
ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்
செவிகளில் நிறைகின்றாய்
உன் பார்வை வரம் கேட்கும்
ஏழை யாசகன்
உன் பேரை தினம் பாடும்
நானோர் வாசகன்
நறுமுகையே குறுநிலவே
தரு நிழலே குளிர் மழையே
நீயின்றி என் வாழ்வு இல்லையே.

பாடல் : வசீகரன்
குரல் : விதுபிரதாபன்
இசை : உதயன் விக்டர்
எண் : 07
ஏட்டில் : 07.11.2001
இறுவட்டு: காதல் கடிதம்
வெளியீடு: 02.08.2003
தயாரிப்பு : வசீகரன் ஆக்கம் தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке