மூதேவி / தமிழர் வரலாறு / tamil history / moodhevi / jyeshta devi # tamil god - ULLATCHI TV

Описание к видео மூதேவி / தமிழர் வரலாறு / tamil history / moodhevi / jyeshta devi # tamil god - ULLATCHI TV

தமிழர்களின் செல்வத்துக்கான தெய்வம் மூதேவிதான்...சீதேவி அல்ல...

மூதேவி... இந்த வார்த்தை தற்போது ஒருவரை திட்டுவதற்கு பயன்படுத்தப் படுகிறது.. ஆனால் தமிழர்களின் ஆதி தெய்வமான மூத்த தேவிதான் மூதேவி என்று மாறியிருக்கிறது.

தாய் வழி சமூகத்தின் தெய்வ அடையாளம்தான் மூத்த தேவி என்பதை திருனெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் அருகில் உள்ள பதினாலாம்பேரியின் ஆண்டிச்சிப் பாறை சுட்டிக் காட்டுகிறது..கிபி. 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட முற்றுப்பெறாத இந்த குடவரையை ஆண்டிச்சிப் பாறை என்று ஊர்மக்கள் அழைப்பதிலிருந்தே நமது தாய் வழிச் சமூகத்தின் வழிபாட்டு உண்மை புரியும் என்கிறார் தமிழறிஞரும் வரலாற்று ஆய்வாளர்மான திரு. சங்கர நாராயணன்.

வேளாண்மைக்கான தெய்வ்ச்மாகவும் செல்வத்துக்கான தெய்வமாகவும் இந்த மூத்ததேவிதான் திகழ்ந்திருக்கிறது...

வட மானிலங்களில் கூட் ஜேஷ்டா தேவி உள்ளிட்ட பெயர்களால் வணங்கப்பட்டுவரும் நம் ஆதி தெய்வம் தமிழகத்தில் மட்டும் எதிர்மறை விமர்சனங்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது..இதற்கு காரணம் பிற்காலத்தைய சீதேவியின் திணிப்பு என்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக பழந் தமிழர்களின் செல்வத்துக்கான தெய்வம் சீதேவி அல்ல மூதேவி என்கிற மூத்த தெய்வம்தான்.

Комментарии

Информация по комментариям в разработке