01. amalanAdipirAn - thirunakshathra thaniyan (part -1)

Описание к видео 01. amalanAdipirAn - thirunakshathra thaniyan (part -1)

ஆழ்வார்களில் ஒன்பதாவதாக அவதரித்தவர் பாணகவி எனப் பெயர் பெற்ற திருப்பாணாழ்வார். வீணையில் இசை மீட்டி ஶ்ரீரங்கநாதன் பெரியபெருமாளுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியவர். இவர் பாடிய அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. வேத வேதாந்தத்தின் ஸாரம் அனைத்தையும் இந்த பத்து பாசுரங்களில் கொடுத்து விட்டார்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி கடைசி பாடலில் "உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்" என்று வேண்டினார். திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் பிரபந்தத்தின் முதல் பாடலில் "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று ஆரம்பிக்கிறார். வேண்டிக் கொண்டது தொண்டரடிப்பொடியாழ்வார். வேண்டுதல் பலித்தது திருப்பாணாழ்வாரிடத்தில். இருவருமே அரங்கனிடத்தில் ஈடுபட்டவர்கள். ஆழ்வார்கள் அனைவருக்குமே ஒற்றுமை உள்ளது. அனைவருக்குமே உடல் வேறாக இருந்தாலும் அவர்களுடைய கருத்து, குரல் ஒன்றாகவே இருக்கும். ஆழ்வார்களுக்குள் சிறப்பே, சாதி வேறுபாடோ, ஆண் பெண் என்ற வேறுபாடோ கிடையாது என்பதுதான். திருமாலையில் தொண்டரடிப்பொடியாழ்வாரால் சொல்லப்பட்ட பக்தனே திருப்பாணாழ்வார்தான்.

இதுபோன்ற பல சுவையான விஷயங்களையும், திருப்பாணாழ்வாரைப் பற்றிய தனியன் ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம்.`

Комментарии

Информация по комментариям в разработке