கடையடைப்பால் ஸ்தம்பித்த திருப்பூர் மாவட்டம்! Tax Hike | Shop Close Protest | Tiruppur

Описание к видео கடையடைப்பால் ஸ்தம்பித்த திருப்பூர் மாவட்டம்! Tax Hike | Shop Close Protest | Tiruppur

#Partnership கடையடைப்பால் ஸ்தம்பித்த திருப்பூர் மாவட்டம்!
Tax Hike | Shop Close Protest | Tiruppur

திருப்பூரில் வரி உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து வணிகர் சங்கங்கள், எதிர்கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் நடக்கிறது.

மாநகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓட்டல் பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிப்பதால் தொழில் செய்ய முடியவில்லை என ஓட்டல் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

திருப்பூரில் மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரி, துணிக்கடை, நகைக்கடை, ஸ்டேஷனரி என அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவையும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரி, துணிக்கடை, நகைக்கடை, ஸ்டேஷனரி என அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவையும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.#TaxHike #Shop CloseProtest #Tiruppur

Комментарии

Информация по комментариям в разработке