திருமூலர் திருமந்திரம் பாடல் 14 பொருள் விளக்கம் .thirumoolar thirumanthiram padal 14

Описание к видео திருமூலர் திருமந்திரம் பாடல் 14 பொருள் விளக்கம் .thirumoolar thirumanthiram padal 14

சர்வம் சிவமயம் telegram channel join-: https://t.me/+iJDdf0k73uszYmVl


திருமூலர் திருமந்திரம் பாடல் 14 பொருள் விளக்கம்-:

பாடல் #14: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து
கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன் கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
விளக்கம்:
தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து
நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களின் மாயையை அழிக்கும் ஈசுவரனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவ்வாறு மூவரையும் கடந்து அனைத்திற்கும் இறைவனாக இருக்கின்ற சதாசிவமூர்த்தியை யாம் காணும் இடமெல்லாம் கண்டு நின்றோம்.

Комментарии

Информация по комментариям в разработке