ஜார்ஜ் முல்லர் 1805 - 1898 மிஷனெரி வாழ்கை வரலாறு - தமிழ் Christian missionary history -Tamil

Описание к видео ஜார்ஜ் முல்லர் 1805 - 1898 மிஷனெரி வாழ்கை வரலாறு - தமிழ் Christian missionary history -Tamil

ஜியார்ஜ் முல்லர் 1805 - 1898


("தன்னை
உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே
நோக்கிக் கொண்டிருக்கும்" (ஏசாயா 17 : 8 என்ற தேவ வாக்கின்படி இஸ்ரவேலின்
பரிசுத்தர் ஒருவரையே தன் வாழ் நாள் காலம் முழுவதும் நோக்கி, நோக்கி
பார்த்து தான் ஏறெடுத்த 50000 (ஐம்பதினாயிரம்) ஜெபங்களுக்கு பதிலைப்
பெற்றுக்கொண்ட தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லர் ஆவார். அந்த 50000 ஜெபங்களில்
30000 (முப்பதாயிரம்) ஜெபங்கள் 24 மணி நேரத்தில் கர்த்தரால் விடை
அளிக்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார். அநேக ஜெபங்கள் அவர் தனது
முழங்கால்களிலிருந்து எழும்பும் முன்னரே தேவனிடமிருந்து பதிலைப்
பெற்றுக்கொண்டது என்று சொல்லப்படுகின்றது. "இந்த உலகத்தில் எந்த ஒரு
மனிதனும் ஜியார்ஜ் முல்லர் தனது தேவைகளுக்கு என்னிடம் பணம் கேட்டார்" என்று
சொல்ல இயலாது என்று அவர் கூறுகின்றார். 10000 (பத்தாயிரம்) அநாதை
பிள்ளைகளை ஒரு நேர ஆகாரம் கூட அவர்களுக்கு தடையில்லாமல் தேவ ஒத்தாசையால்
போஷித்து அவர்களை நித்திய ஜீவ பாதையில் வழிநடத்திய உத்தம தேவ பக்தன் அவர்.
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் தனது முழங்கால்களில்
நின்றும், 100 தடவைகள் நாற்காலியில் உட்கார்ந்தவாறும் வாசித்த தேவ பக்தன்.
வல்லமையான ஜெப மாந்தன். உலகம் முழுவதும் பல தடவைகளும் பிரயாணம் செய்து
கர்த்தர் ஒருவரையே முழுமையாக சார்ந்து ஜெபம், விசுவாசத்தின் மூலமாக நாம்
ஆண்டவருக்காக மா மாட்சியான காரியங்களை இன்றும் சாதித்து விடலாம் என்று
பறைசாற்றிய சிலுவை வீரர். அவர் தோற்றுவித்த "வேத ஞான ஸ்தாபனம்"
(Scriptural Knowledge Institution)
மூலமாக லட்சக்கணக்கான வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷ பங்குகள்,
திரள் திரளான சுவிசேஷ கைப்பிரதிகள் உலகமெங்குமுள்ள தேவ ஊழியர்களுக்கு
இலவசமாக அனுப்பப்பட்டதுடன், அநேக மிஷனரிகளையும் பொருளுதவியினால்
தாங்கினார். அவர் ஒரு மாபெரும் கொடையாளி என்று அழைக்கப்படுகின்றார். அந்த
தேவ மனிதரின் வாழ்க்கை சரித்திரத்தை அதிகமான ஜெபத்தோடும், மிகுந்த
பிரயாசத்தோடும் மொழி பெயர்த்து சுருக்கமாக கீழே தந்திருக்கின்றேன்.
நீங்களும் அதை ஜெபத்தோடு வாசித்து அவருடைய பரிசுத்த வாழ்க்கையை தேவ
பெலத்தால் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்)

"நீ ஆண்டவரோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பாயானால்,
அவருடைய சகாயத்தை எதிர்நோக்கி நீ காத்திருப்பாயானால் அவர் உன்னை
ஒருக்காலும் கைவிடார்"

"எனது ஒவ்வொரு நாளின் பிரதான பணி எனது ஆண்டவர்
இயேசுவோடு அதிகமாக உறவாடி மகிழ்வதேயாகும். எனது முதன்மையான எதிர்பார்ப்பு
நான் என் ஆண்டவருக்கு எப்படியாக தொண்டு செய்யலாம் என்பதல்ல, எனது
ஆவிக்குரிய உள்ளான மனுஷனை தேவனுக்கு முன்பாக எவ்விதமாக போஷித்து
பிரகாசிப்பிக்கலாம் என்பதே"

"தேவனுடைய வார்த்தையை எவ்வளவு குறைவாக நாம்
வாசிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் அதை வாசிக்கவும் விரும்புவோம். எவ்வளவு
குறைவான நேரம் நாம் ஜெபிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் ஜெபிக்கவும்
விரும்புவோம்"

"ஒரு தேவ ஊழியனுக்கு ஒரே ஒரு எஜமானன் மட்டுமே
இருக்க முடியும். ஒரு தேவ ஊழியன் இந்த உலகத்தில் செல்வச்சீமானாகவும்,
சுகபோகியாகவும், பெரியவனாகவும், உலகத்தால் கனப்படுத்தப்படவும், மக்களால்
புகழப்படவும் மனதார ஆசை கொண்டிருக்கும் அதே வேளையில் அவனது எஜமானன்
ஏழையாகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும், அசட்டைபண்ணப்பட்டவருமாக இருப்பதில்
எந்த ஒரு அர்த்தமுமில்லை. அப்படியானால் அவனது எஜமானன் ஆண்டவர் இயேசுவல்ல,
உலக ராஜ்யங்களை காண்பித்து அதின் ஆளுகையை தேவ மைந்தனுக்கு வாக்களித்த
தந்திர சாத்தானேதான்"

"ஒரு ஏழை மனிதன் (ஜியார்ஜ் முல்லர்) தனது எளிமையான
ஜெபத்தாலும், விசுவாசத்தாலும் எந்த ஒரு தனி மனிதனையும் உதவிக்காக கெஞ்சிக்
கேட்காமல் ஒரு பெரிய அநாதை இல்லத்தை தோற்றுவித்து அதைச் சீரும் சிறப்புமாக
பல்லாண்டு காலமாக பராமரித்துக் கொண்டு செல்லுவானானால் இது ஒன்றே "தேவன்
இன்றும் உண்மையுள்ளவர்" என்பதற்கும் "தேவன் இன்றும் ஜெபத்தைக் கேட்கிறவர்"
என்பதற்கும் அப்பட்டமான அத்தாட்சியாகும்"

"நான் ஜெப ஆவியிலேயே ஜீவிக்கின்றேன். நான் நடந்து
கொண்டே ஜெபிக்கின்றேன். நான் படுத்திருக்கும்போதும், எழும்பும்போதும்
ஜெபிக்கின்றேன். எனது ஜெபங்களுக்கான பதில்கள் வந்தவண்ணமாகவே இருக்கின்றன.

Комментарии

Информация по комментариям в разработке