ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? | நடை பயிற்சி முறை | Distance to walk daily

Описание к видео ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? | நடை பயிற்சி முறை | Distance to walk daily

#Walking #நடைபயிற்சி

எடை குறைப்புக்காகவோ, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவோ, சர்க்கரை அளவை குறைப்பதற்காகவோ நிறைய பேர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். எது எப்படி இருந்தாலும் எல்லோரும் நடந்தே ஆக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நாளைக்கு 10,000 நடை எடுத்து வைத்து நடந்தால் ஐந்து கிமி நடக்கலாம். இது சராசரியாக அனைவரும் நடக்க வேண்டிய தூரம் என்று சொல்லலாம். இந்த 10,000 எண்ணிக்கைக்கு மேலே நடந்தால் தான் உடற்பயிற்சி என்ற கோட்பாட்டுக்குள் வரும். அதில் தான் உடல் எடை குறிப்போ, பிற பயன்களோ கிட்டும்.


ஓடுவதை விடவும் நடப்பது கால்களுக்கு நல்லது. குறிப்பாக வயதானவர்கள் ஓடுவதை தனது உடல் பாதுகாப்பிற்காக தவிர்ப்பது நல்லது. பொதுவாக ட்ரெட்மில் கருவியில் நடப்பதைக் காட்டிலும் ஒரு திடலில் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. ட்ரெட்மில் கருவியில் தான் நடக்க வேண்டும் என்றால் குறைவான வேகத்தில் பொருத்தி நடப்பது நல்லது.

Комментарии

Информация по комментариям в разработке