PG TRB மொழி வரலாறு பாடம் 2

Описание к видео PG TRB மொழி வரலாறு பாடம் 2

மொழி வரலாற்றுச் சான்றுகள்
👉மொழி வரலாறு என்பது மொழியில் காலம்தோறும் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
👉மொழி வளர்வது பரிணாம வளர்ச்சி யாலும்,கடன் வாங்கலாலும் என்பர் வரலாற்று மொழியியல் பேரறிஞர்கள்.
👉 இலக்கியங்கள்
1. எழுத்து இலக்கியம் - செய்யுள் நூல்கள், மரபு, மரபுத்தொடர்கள்.
2. வாய்மொழி இலக்கியம் - பேச்சு வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
👉 வாய்மொழி இலக்கியங்களே உண்மையான மொழியின் இயல்பைக் காட்டுவனவாகும்.
👉 தொல்காப்பியம் - எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி ' அல் '.
👉 சிலப்பதிகாரம் - அல் ஈறு அன் மாறியது.
👉 மருங்கொலி (ல) மூக்கொலி (ன) மாறியதை சிலம்பு மூலம் காணலாம்.
👉 திருநாவுக்கரசர் தேவாரம்
பிரளய - பிரளயம்
ஷமி - சமி
நிகழ்கால இடைநிலை ' கின்று , கிறு' சங்கம் மருவிய கால இலக்கியங்களில் அதிகம் பெற்று வருவதைக் காணலாம்.
👉 சங்க இலக்கியங்களில் பரிபாடலில் நிகழ்கால இடைநிலை பற்றி அறிகிறோம்.
👉 வாய்மொழி இலக்கியங்கள்
இராமப்பய்யன் அம்மானை, சிவ கெங்கை சரித்திரம், மகா புராணம் அம்மானை.
👉18ஆம் நூற்றாண்டில் தமிழின் ஒலி வகையில் சிறப்பு இயல்புகளை கூறும் நூல் மகாபுராணம் அம்மானை.
👉 யகரம் ஒலிப்புடை ஒலி என்பதனை மிடற்று எழு வளியிசை என்ற தொடரால் தொல்காப்பியர் சுட்டுகிறார்.
👉 வியங்கோள் விகுதிகள்
இளம்பூரணர், தெய்வச்சிலையார் - க
சேனாவரையர் - க,யா, அல்
நச்சினார்க்கினியர், கல்லாடர் - க,யா, அல், ஆல்,ஆர்,மார்,உம், ஐ.
👉கல்வெட்டுகளில் உடம்படுமெய் இல்லாமல் உயிர் எழுத்துகள் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
கோ இலுக்கு , ஆ இரம்,கை இல்.
👉 மூல திராவிடத்தில் யகர ஒலி உண்டு.
யாள், யழ.
👉 இடைக்காலத்தில் யகரம் வழக்கு இழந்துவிட்டது.
👉 ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டில் யகரம் மொழிக்கு முதலாக வந்துள்ளது.
👉 தன்மை ஒருமை - ஏன்
தன்மைப் பன்மை - ஓம்
👉 கல்வெட்டில் காணப்படும் விகுதிகள்
அன்,ஆன், ஆள்,ஆர்,ஆர்கள்.
#PG #TRB #மொழிவரலாறு.

Комментарии

Информация по комментариям в разработке