அவளும் நானும் பாடல் - பாரதிதாசன்(தமிழ் வரிகளுடன்) Avalum Nanum Song - Bharathidasan(tamil lyrics)

Описание к видео அவளும் நானும் பாடல் - பாரதிதாசன்(தமிழ் வரிகளுடன்) Avalum Nanum Song - Bharathidasan(tamil lyrics)

பாடல் - அவளும் நானும்
வரிகள் - பாவேந்தர் பாரதிதாசன்
இசை - ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: விஜய் ஜெசுதாஸ்
காணொளி தொகுப்பு - viji ranjni (youtuber)

வரிகள் :

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

Комментарии

Информация по комментариям в разработке