மண்ணை இருந்து துழாவி....நம்மாழ்வார் திருவாய்மொழி BY SELVAN DESIKA RAMANUJAN , KEEZHAPATTAM.
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண்
இது என்னும்,
விண்ணைத் தொழுது
அவன் மேவு வைகுந்
தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்
வண்ணன் என்னும், அன்னே, என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்
செய்கேன், பெய்வளையீரே.
அவளுக்குக் கண்ணன்மீது மயக்கம், அதுவும் சாதாரண மயக்கமல்ல, பெரிய மயக்கம்! எப்பேர்ப்பட்ட மயக்கம் என்றால், நம்மாழ்வார் ‘திருவாய்மொழி’யில் காட்டுகிற பெண்ணடியார்களில் இவளும் ஒருத்தி. அப்படியென்றால், அவளுடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம். எதைப்பார்த்தாலும் கண்ணனே என்கிறாள் அவள். எந்த வேலையிலும் கவனம் செல்லாமல் அவனையே எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
இதைப்பார்த்த அவளுடைய தாய்க்குக் கவலை. ‘எங்களுக்கெல்லாம் பெருமான்மீது பக்தி இல்லையா என்ன? இவள்மட்டும் இப்படி மயங்கி நிற்பது ஏன்?’ என்று குழம்புகிறார், ‘ஊராருக்கு இது தெரிந்தால் என்ன சொல்வார்களோ!’ என்று யோசிக்கிறார். அதேநேரம் அவருடைய மகள் கீழே தரையில் அமர்ந்திருக்கிறாள். மண்ணைக் கைகளால் துழாவிப்பார்த்துவிட்டு, ‘இது வாமனன் அளந்த மண்’ என்கிறாள்.
மறுகணம், வானத்தை நிமிர்ந்துபார்க்கிறாள், ‘அதோ, அவன் ஆளும் பரமபதம்’ என்கிறாள். அவளுடைய கண்களில் நீர் பெருகுகிறது. அந்த நீரைக்கண்டதும், அவளுக்கு மீண்டும் திருமால் நினைவு வருகிறது, ‘கடல்வண்ணா’ என்று அவனை எண்ணிப் புலம்புகிறாள். இதையெல்லாம் பார்த்த அன்னை திகைக் கிறார். தன்னுடைய தோழியரிடம் சென்று குழப்பத்தோடு பேசுகிறார். ‘வளையலணிந்த பெண்களே, இப்போது நான் என்ன செய்வது? அந்தப்பெருமான் என் மகளை இப்படி மயக்கத்தில் ஆழ்த்திவிட்டானே!’
Dizziness on her eyes, that too is not normal dizziness, big dizziness! What a dizziness, she is one of the women in Nammazhvar ‘Thiruvaimozhi’. If so, you can understand the depth of her love. Whatever she sees, Kannan says. She sits counting on him without focusing on any work.
Her mother was worried when she saw this. ‘What if we all have no devotion to the Lord? Why is she the only one fainting like this? ' At the same time his daughter is sitting on the floor below. After digging through the soil with her hands, she says, 'This is the soil measured by Vamana.'
Again, she looks up at the sky and says, 'Yes, he is the ruling serpent.' Tears well up in her eyes. When she sees the water, she remembers Thirumal again, thinking of him as ‘Kadalvanna’ and lamenting. The mother is shocked to see all this. He goes to his girlfriend and talks to her in confusion. ‘Ladies and gentlemen, what shall I do now? That giant has mesmerized my daughter like this! '
Song by Selvan Desikan Ramanujan , Keezha pattam,
Like, Subscribe, Share and Support!!!
Информация по комментариям в разработке