இஸ்ரேல்-ஈரான் மோதலில் பக் பக்: உச்சகட்ட பதற்றம் | Jaishankar | Iran Israel proxy conflict

Описание к видео இஸ்ரேல்-ஈரான் மோதலில் பக் பக்: உச்சகட்ட பதற்றம் | Jaishankar | Iran Israel proxy conflict

#Partnership பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா
பயங்கரவாத அமைப்புகளை இஸ்ரேல் பந்தாடி வருகிறது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டுமே ஈரான் நாட்டின் ஆதரவுடன்
செயல்படும் அமைப்புகளாகும்.

தனது ஆதரவு அமைப்புகள் மீது நடந்த தாக்குதலை பொறுக்க முடியாமல்
இப்போது இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் தொடங்கி உள்ளது.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது ஈரான்.

இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு
அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது.

எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என இஸ்ரேல் ராணுவம்
சொல்கிறது.

மத்திய கிழக்கில் இப்படி மாற்றி மாற்றி தாக்குதல் தொடர்வதால்
உலக அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன்
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு அவசர ஆலோசனை நடத்தினார்.

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை
கொடுத்தாக வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் தீவிரம்
அடைந்துள்ளது.

இதற்கிடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் உள்ள சர்வதேச அமைதி மையத்துக்கு சென்றுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் போராக மாறும் அபாயம் உள்ளது
என ஜெய் சங்கர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் முழு அளவிலான
போராக மாறும் அபாயம் உள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இந்தியா
கவலை கொண்டுள்ளது.

சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

பொதுமக்களின் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முடியும்.

இக்கட்டான காலங்களில் தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தை
குறைத்து மதிப்பிடாதீர்கள்.

2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த மோதலை பயங்கரவாத தாக்குதலாக
இந்தியா கருதுகிறது.

இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள்
புரிந்துகொள்கிறோம்.

ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு
இணங்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் செயல்படுவது முக்கியம் என
ஜெய்சங்கர் பேசினார்.

இப்போது நிலவும் பதற்றமான சூழலில் ஈரான் மீது எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும்.

அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஈரானுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்
என வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலை தொடர்ந்து ஐ.நா சபை பொது செயலாளர்
அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைவதை கண்டிக்கிறேன்.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை என கூறியுள்ளார்.# #IranIsraelConflict
#MiddleEastTensions
#JaishankarStatement
#ProxyWar
#GeopoliticalCrisis

Комментарии

Информация по комментариям в разработке