அலகாபாத் திரிவேணி சங்கமம் | ஊரோடி3.0 |பகுதி-14 |

Описание к видео அலகாபாத் திரிவேணி சங்கமம் | ஊரோடி3.0 |பகுதி-14 |

அலகாபாத் திரிவேணி சங்கமம் | ஊரோடி3.0 |பகுதி-14 | #travel #trivenisangamam #alahabad #river #boating

வணக்கம் நண்பர்களே,

வாரணாசி பாட்னா இடையே அலகாபாத் கயா மூன்றாவது நாள் ஆகஸ்டு 16 அலகாபாத்தில் தொடங்கியது. வாரணாசி முதல் அலகாபாத் வரை காரில் 150 கிலோமீட்டர் 5000 ரூபாய் சென்று வர கேட்டார்கள்.

குறைந்த தூரம் தான் ஆனால் சாலைகள் மிக மோசமாக இருந்ததால் சென்று சேர்வதற்கு ஆறு மணி நேரம் வரை ஆகிவிட்டது. அந்த பகுதி சாலைகள் அந்த அளவுக்கு இடைஞ்சலாக இருந்தது. திரிவேணி சங்கமம் சென்றோம். அங்கே ஏராளமான கடைகள் இருக்கிறது. ஏராளமான படகுகளும் இருக்கிறது. எல்லாமே துடுப்பு படகுகள் தான்.

நாம் சரியாக பேரம் பேசி
ஏறாவிட்டால் பல ஆயிரங்களை இழக்க நேரிடும் ஆகவே இயன்றவரை நாலைந்து ஹிந்தி வார்த்தைகளையாவது கற்றுக்கொண்டு பேசி முடிந்த அளவு குறைத்து பேசி படகில் பயணம் செய்யுங்கள். குளிப்பதற்கு திட்டமிட்டு இருந்தால் நீரில் மூழ்கியெல்லாம் குளிக்க முடியாது. நடு ஆற்றில் ஓரிடத்தில் கோட்டை நிறுத்தி அருகில் இரண்டு போட்டுகளுக்கு இடையே பலகை அமைத்து குளிப்பதற்கு ஏதுவாக இடம் அமைத்து கொடுப்பார்கள். அங்கே தான் குளிக்க வேண்டும்.

மேலும் எங்கும் ஆற்று நீர் அசுத்தமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. புனித நதிகள் எல்லாமே இந்த அளவு மோசமாக நம்முடைய செயல்களால் தான் மாறி இருக்கிறது. மிக சுத்தமான நீரில் குளிக்க வேண்டும் என்று விரும்பினால் ஹரித்துவார் ரிஷிகேஷ் போன்ற இமய மலைக்கு அருகில் இருக்கக்கூடிய இடங்களுக்கு தான் போக வேண்டும். அங்கேயும் படங்களில் பார்க்கும்போது அருமையாக இருக்கிறது. உண்மை நிலை என்னவென்று நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். விரைவில் அங்கேயும் செல்ல வேண்டும்.

இங்கே மேலும் பல சுற்றுலா தளங்கள் இருக்கிறது. என்று சொன்னார்கள். ஆனால் திரிவேணி சங்கமம் ஒன்றை பார்ப்பதற்கே காலை வாரணாசியில் இருந்து ஆறு மணிக்கு கிளம்பி இதை பார்த்துவிட்டு மதிய உணவு உண்ண வருவதற்கே 3 மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி மீண்டும் வாரணாசி சென்று மாலையில் காலபைரவர் கோவில் பார்க்க வேண்டும். அதற்கு பின்பு மணிகர்ணிகா கார்டு செல்ல வேண்டும் ஏனென்றால் இன்றோடு வாரணாசி பயணம் முடிகிறது. மறுநாள் 17 ஆம் தேதி காலை கயா செல்ல வேண்டியது இருந்ததால் விரைந்து வாரணாசி நோக்கி சென்றோம்.

வட இந்தியாவில் பல இடங்களிலும் தமிழ் உணவுகள் கிடைப்பது சிரமம் முடிந்தவரை சப்பாத்தி சாப்பிட்டு கொள்வது நல்லது இல்லையேல் வட இந்திய தாலி உணவை உண்பது நல்லது ஓரளவுக்கு அது நன்றாகவே இருக்கிறது.

இடையில் மழை செல்கிற சாலை பயணம் இன்னும் கடினமாக இருந்தது. ஒரு வழியாக வாரணாசி சென்று சேர்ந்தோம். அங்கே சனிக்கிழமை தொடர் விடுமுறை காரணமாக எல்லா புறங்களிலும் கூட்டம் டிராபிக் ஜாம். மாலையில் முதலில் காலபைரவர் கோவிலுக்கு சென்றோம். அதுவும் மிகக் குறுகலான ஒரு சந்துக்குள் மிகக் குறுகிய கோவில் ஆனால் அவ்வளவு கூட்டம் ஏராளமான மக்கள் சூழ்ந்து இருக்கிறார்கள் கால பைரவர் நம்மூர் அய்யனார் போன்று பெரிய முகத்துடன் கொஞ்சம் பயங்கரமாக தான் காட்சியளித்தார். அங்கேயும் புகைப்படம் வீடியோ எடுக்க அனுமதி இல்லாததால் எடுக்க முடியவில்லை.

காலபைரவர் கோயில் கர்ப்ப கிரகத்தை சுற்றியுள்ள மண்டபத்தில் வரிசையாக ஒவ்வொரு தூணுக்கும் ஒரு நபர் உட்கார்ந்து கயிறு கட்டிவிட்டு தலையில் குச்சியை வைத்து தட்டி ஏதோ ஓதி கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நம்மையும் கையை பிடித்து இழுத்து ஏதோ செய்ய முற்பட்டார்கள் தப்பித்து கிளம்பிவிட்டோம்.

பைரவா பைரவா என்று சொன்னால் சாலையில் நாய் துரத்தும் போது தப்பித்துக் கொள்ளலாம். நாய் நம் பின்னால் வராது என்று எப்போதோ ஆச்சி சொன்னது ஞாபகம் வந்தது. சாய்பாபா கோவில் போல இந்த காலபைரவர் கோவில் சுற்றிலும் பல இடங்களில் நாய்கள் அதிகமாக இருந்தது. வேறு இடங்களில் நாய்களை பார்க்க முடியவில்லை குரங்குகள் மாடுகள் இருந்தது.

அங்கு இருந்து வெளியேறி அதே சாலையில் சில பொருட்களை வாங்கிவிட்டு, கூகுள் மேப் எடுத்து பார்த்து மணிகர்ணிகா காட் எவ்வளவு தொலைவு என்று பார்த்தால் 800 மீட்டர் என்று காட்டியது. நம்பி அருகில் தானே நடந்து சென்று விடலாம் என்று கிளம்பினோம். மேப் கூட்டி செல்லும் வழியில் நடந்து கொண்டே இருக்கிறோம். கிட்டத்தட்ட ஐந்து ஆறு கிலோமீட்டர் சுற்றிய தெருவிலேயே சுற்றுகிறோம். மணிகர்ணிகா காட் மட்டும் வரவே இல்லை. யாரிடம் கேட்டாலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல் தோ கிலோமீட்டர் என்று சொல்வது போல் 100 மீட்டர் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அந்த இடம் மட்டும் வரவே இல்லை கிட்டத்தட்ட எட்டு மணிக்கு நடக்க தொடங்கி எட்டே முக்கால் மணிக்கு தான் மணிகர்ணிகா காட் அருகே வந்து சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழையும் போது அங்கே எட்டு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தது இரவு 9 மணி முற்றிலும் நூற்றுக்கணக்கான பேர் நின்று கொண்டிருந்தார்கள் யாரும் இருந்து கொண்டிருக்கக் கூடிய படங்களில் உறவினர்கள் அல்ல பல ஊரிலிருந்து வந்திருக்கக்கூடிய சுற்றுலா பயணிகள்.

தமிழ் youtube காணொளிகள் எதிலும் மணிகர்ணிகா காட் ஐ இரவில் யாரும் படம்பிடித்து போட்டு பார்க்கவில்லை. முதல் முறையாக இரவில் அந்த பகுதியில் இருந்து அதன் வரலாற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அது அடுத்த பதிவில்...

அன்புடன்
M.V.R Infotainer

Комментарии

Информация по комментариям в разработке