நத்தம் 60 அடி வேங்கை சேகு பாவா தர்கா வரலாறு|Natham 60 Adi Vengai Sheihu Bava Dargah History

Описание к видео நத்தம் 60 அடி வேங்கை சேகு பாவா தர்கா வரலாறு|Natham 60 Adi Vengai Sheihu Bava Dargah History

#nathamdargah #thandoratamilan #dargah #natham #islam #nathamsheihubavadargah #nathamhistory #tamilmuslim

Thandora Tamilan Islam
Contact number 9524263587

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
கண்ணியத்திற்குரியவர்களே!
நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் தொடர்ந்து பல்வேறு தர்காக்களை பற்றிய வரலாறுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியில் அமைந்துள்ள 60 அடி வேங்கை மகான் சேகு பாவா வலியுல்லாஹ் தர்காவின் சிறப்புகளும் வரலாறு குறித்து இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். சேகு பாவா வலியுல்லாஹ் கி.பி. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அரபு நாட்டிலிருந்து வந்த அவர் நத்தம் புதுப்பட்டி பகுதிகளில் தங்கி தீனுல் இஸ்லாமை அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார். மாபெரும் வீரரான அவர் குதிரையில் செல்லும் போது அந்தக் குதிரை 60 அடி நீளத்திற்கு பாய்ந்து செல்லுமாம். இதனால் அவரை அப்பகுதி மக்கள் 60 அடி வேங்கை சேகு பாவா என்று அழைத்திருக்கிறார்கள். அவர் வாழ்ந்தது சுதந்திரப்போராட்ட காலமாதலால் ஹிந்து முஸ்லிம் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்‌. சிவகங்கை தளபதிகள் மருது சகோதரர்களுக்கு உற்ற நண்பராகவும் திகழ்ந்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தையும் இவர் சரி செய்திருக்கிறார். இதனால் மருது சகோதரர்கள் இந்தப் பகுதியை அவரது பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள். நத்தம் 60 அடி வேங்கை சேகு பாவாவின் வரலாற்றினை இந்தக் காணொளியில் காண்போம்.
#60adivengaishihubava
#60அடிவேங்கைசேகுபாவாதர்கா

Sheihu Bava Dargah
https://maps.app.goo.gl/ozek8a7nzubas...

Комментарии

Информация по комментариям в разработке