அருள் தரும் அழகு மலையான் - VM.Mahalingam, Mathichiyam Bala

Описание к видео அருள் தரும் அழகு மலையான் - VM.Mahalingam, Mathichiyam Bala

#MathichiyamBala

தொகையறா:

அடர்ந்த மலை காட்டுக்குள்ள
ராக்கு தீர்த்தகரை தொட்டியில தீர்த்தங்களும் ஆடிக்கிட்டு
கிளம்பி வாராரு எங்க சாமி...
ஹரி ஹரி கோவிந்தா...

பச்சை பட்டு உடுத்தி
சந்தன கருப்பு வாசலில
மாமதுரை போயிவாரே
என்று சொல்லி புறப்பட்டு வாராரு...
ஹரி ஹரி கோவிந்தா...

நாங்க கேட்காமலேயே எங்களுக்கு
வரம் கொடுக்கும் சாமி...
உந்தன் அருளாலே
நெல்மணிய தாங்கி நிற்கும் பூமி..
நீ பார்த்த இடமெல்லாம்
பசுமை பூத்து நிற்கிது...
பார்த்த வயிரெல்லாம் பால்வார்க்குது...
ஹரி ஹரி கோவிந்தா...

ஏங்குலம் காக்கும் சாமியே
உன் முகம் பார்க்க வந்தோமய்யா
கள்ளழகர் வரலாற்றை எடுத்துச் சொல்ல வெற்றி சூழும் விஜய தயா...
முத்து கருப்பா..
பதினெட்டாம்படி கருப்பா...
டேய் வாடா....


பல்லவி:

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...

கொட்டு சத்தம் இடிமுழங்க
கொம்பு சத்தம் வானக்கிழிக்க
வளரியை ஏந்திங்கிட்டு
சாமி வாராரு கள்ளழகரு....

மக்கள் வெள்ளம் திரண்டு நிக்க வைகையாறு ஆர்ப்பரிக்க
தங்க குதிரை தகதகக்க
எங்க மதுர கலகலக்க
வாராரு வாராரு கள்ளழகர் வாராரு...

நாராயண கோஷம் கேட்க
நம்ம நாமகாரே வாராரய்யா
ஜமதாடு கத்தி புடிச்சு
நம்ம கோவிந்தே வாராரய்யா....

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...

சரணம்:1

நாடாளும் மீனாட்சி கல்யாணம் பாக்க
ஊர்கூடி இழுங்கடா தேரு

நீரோடும் வைகையிலே அழகர பாத்தா பொன்னாக சொலிக்குது ஊரு

சரட்டு சரட்டு சத்தம் கேக்குது
அய்யன் சலங்க சத்தம் காதக் துளைக்கிது

சரட்டு சரட்டு சத்தம் கேக்குது
அய்யன் சலங்க சத்தம் காதக் துளைக்கிது

உறுமி மேளம் அடிக்க
நம்ம மதுரை மக்க கிளம்ப
நாடி நரம்பு தெறிக்க
மீன் கொடியும் மேலே பறக்க

மாசி வீதி மணக்கும்
நம்ம சித்திரை விழா நடக்கும்
சாதி சமய மறந்து-புது
சமத்துவமும் பொறக்கும்

மதுரை மக்க சொக்கி நிக்க அங்கமெல்லாம் புல்லரிக்க
வாராரய்யா...

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...

சரணம்:2

வண்டியூரு கம்மாக்குள்ள
நாரை சுட்டு புடிக்க
வேடிக்கையாம் நடக்குது பாரு

சாரட்டு வண்டியில சாமத்துல வந்து சண்டித்தனம் காட்டுறாரு பாரு

சுருட்டு சுருட்டுனு புகையும் பறக்குது
முத்து கருப்பசாமி காவக்காக்குது

சுருட்டு சுருட்டுனு புகையும் பறக்குது
முத்து கருப்பசாமி காவக்காக்குது

தண்ணி பிச்சுக்காரரெல்லாம்
ஆட்டம் பாட்டம் ஆட
வீதியில அழகருக்கு
பூ மாலை போட

கல்லு வாடை மறச்சி நிக்க
மோரு கஞ்சி குடிக்க
தப்பு சத்தம் கேட்க
அய்யன் குதிரையில பறக்க

அழகர்சாமி குதிரை ஏறி
மக்களத்தான் காத்திடவே
வாராரய்யா...

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...

கொட்டு சத்தம் இடிமுழங்க
கொம்பு சத்தம் வானக்கிழிக்க
வளரியை ஏந்திங்கிட்டு
சாமி வாராரு கள்ளழகரு....

மக்கள் வெள்ளம் திரண்டு நிக்க வைகையாறு ஆர்ப்பரிக்க
தங்க குதிரை தகதகக்க
எங்க மதுர கலகலக்க
வாராரு வாராரு கள்ளழகர் வாராரு

நாராயண கோஷம் கேட்க
நம்ம நாமகாரே வாராரய்யா
ஜமதாடு கத்தி புடிச்சு
நம்ம கோவிந்தே வாராரய்யா

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...

பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...

தயாரிப்பு: முத்து விஜயன்
பாடியவர்: VM.மகாலிங்கம்,மதிச்சியம் பாலா
வரிகள்: கவிமுனி
இசை: சரவண கணேஷ், மதிச்சியம் பாலா
ரிதம்ஸ்: தபேலா கணேஷன்,
டிரம்ஸ்: ஆண்ட்ரோஸ்
நாதஸ்வரம்: சேகர்
எடிட்டிங்: ராம்
MIXING & MASTERING: AA.DERICK
STUDIO: DERICK Madurai

All Rights Reserved to ©Mathichiyam Bala

Powered by ®THE360GROUPS

Комментарии

Информация по комментариям в разработке