திருவள்ளூர் கௌடி மேல்நிலை பள்ளியில், இந்திய திருநாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டன ...

Описание к видео திருவள்ளூர் கௌடி மேல்நிலை பள்ளியில், இந்திய திருநாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டன ...

திருவள்ளூர் கௌடி மேல்நிலை பள்ளியில் பல வருடங்களுக்கு முன்னர் பயின்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 15.08.2024 அன்று காலையில், தங்கள் பள்ளியில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவை கொண்டாட சிறப்பு அழைப்பாளர்களாக இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் CSI கௌடி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவருமான N.S.ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றி, தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் S.R.கென்னடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், திருவள்ளூர் CSI கௌடி ஆயர் W.ரவிநேசகுமார் இறை வேண்டலை வேண்டினார். தேசமே பயப்படாதே பள்ளி பாடகர் குழு பாடல் பாடினர். இப்பள்ளி பாடகர் குழு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அனைத்து இளைஞர் இயக்கம் அணி நடை நடைபெற்றன. முன்னதாக இப்பள்ளியின் தாளாளர் D.செல்வராஜ் தலைமை உரை ஆற்றினார். சாரணர் இயக்கம் J.தேவஅன்புராஜ் உறுதிமொழி உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, இவ்விழாவின் கௌடி கலைக்குழு பயிற்றுனர் S.தேவ கிருபை அமுதசுந்தரி ஏற்பாட்டில் இப்பள்ளி மாணவர்கள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர். நாட்டு நல பணி திட்ட அலுவலர் G.அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றினார். இப்பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஆவிலா சாண்டா ரோஸ் மாணவி, மாணவர் உரை நிகழ்த்தினார். சாரணியர் இயக்கம் B.நிர்மலா பதுமராகம் என்பவர் ஏற்பாட்டில் மாணவிகள் பங்கேற்ற நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியரான S.பிரபுதாஸ் ஆசிரியர் உரை நிகழ்த்தினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க உதவி தலைமை ஆசிரியர் Y.கிதியோன் ஏற்பாட்டில் வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக செய்தனர். சென்னை பேராய மூத்த ஆயரும் கொளடி பள்ளியின் முன்னாள் மாணவருமான Y.L.பாபுராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். J.ஜோஸ்வாடேவிட்மனோவா, விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நன்றியுரை ஆற்றினார். டீக்கண் பரமானந்தம் இறை வேண்டல் வேண்டினார். திருவள்ளுர் CSI கௌடி நினைவாலயம் W.ரவிநேசக்குமார் இறையாசி செய்தார். பள்ளி பாடகர் குழுவினர் நாட்டுப்பண் நிகழ்த்தி இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

Комментарии

Информация по комментариям в разработке