செல்வம் தரும் தீபாவளி | குரு மித்ரேசிவா | Ulchemy Live

Описание к видео செல்வம் தரும் தீபாவளி | குரு மித்ரேசிவா | Ulchemy Live

பண வாசம் / Pana Vaasam: செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சில ரகசியங்கள் (Tamil Edition)

bit.ly/panavaasam

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?
#UlchemyDiwali #UlchemyLive

‘தீபாவளி’ திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அம்மாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத தேய்பிறை திரயோதசி அன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. அம்மாவாசை அன்று ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செல்வம் செழிக்க வேண்டி லட்சுமி தேவியை தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

அன்று தான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி நம் இல்லத்திற்கு வருகிறாள் என்ற நம்பப்படுகிறது. அதனால், வீட்டைச் சுத்தம் செய்கிறோம். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்கிறோம். புத்தாடை அணிந்து, பலவகை இனிப்புகள் பலகாரங்கள் படைத்து லட்சுமி தேவியை வணங்கி வழிபடுகிறோம். பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம்.

உண்மையில் செல்வம் செழிக்க தீபாவளியன்று லட்சுமி தேவியை எப்படி வணங்க வேண்டும்? வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தீபாவளிப் பண்டிகையின் அடிப்படை என்ன? நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி ஒளியமாக்கக் கூடிய தீபாவளிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது? இப்படி பற்பல அரிதினும் அரிதான சூட்சுமங்கள் குறித்து ‘குரு மித்ரேசிவா’ இந்த நேரலையில் பேசுகிறார்.

நம்பிக்கை மற்றும் நேர்மறை சக்தியின் அடையாளமான தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து மேலும் அறிய அனைவரும் வருக.

செல்வம் செழிக்கும் வழி அறிவோம். இருள் நீங்கி ஒளி பெறுவோம். வாழ்வைக் கொண்டாடுவோம்.

Комментарии

Информация по комментариям в разработке