John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்

Описание к видео John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்

ஜாண் பன்யன் (1628–1688)- இவர் ஓர் எழுத்தாளர், ப்யூரிட்டன் போதகர். இவர் எழுதிய "The Pilgrim's Progress" (1678) என்ற நூல் மிகவும் பிரபலமானது. இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் அதிகம் விற்பனையான ஒரு புத்தகம்.
பன்யன் இங்கிலாந்தில் பெட்ஃபோர்டுக்கு அருகிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628ஆம் ஆண்டு பிறந்தார். 2-3 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தபிறகு எல்ஸ்டவுக்குத் திரும்பி பாத்திரங்கள் பழுதுபார்க்கும் தன் தொழிலைத் தொடர்ந்தார். முதல் திருமணத்திற்குப்பிறகு இவர் கிறிஸ்தவராக மாறினார். அவருடைய மனைவி கொண்டுவந்த இரண்டு புத்தகங்களும், அவருடைய மனைவியின் நன்னடத்தையும் அவர் கிறிஸ்தவராகப் பெரும் பங்காற்றின. அவர் விரைவில் வல்லமையான நற்செய்தியாளராக மாறினார். உரிமம் இல்லாதவர்கள் பிரசங்கிக்கக்கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவர் இங்கிலாந்து அரசரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். "இனிமேல் பிரசங்கிக்க மாட்டேன்," என்று சொல்ல மறுத்ததால் 12 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
சிறையில் இருந்த காலத்தில், "Grace Abounding to the Chief of Sinners", என்ற தன் ஆவிக்குரிய சுயவரலாற்றை எழுதினார். சிறையில் இருந்தபோதுதான் அவருடைய மிகவும் பிரபலமான "The Pilgrim's Progress" என்ற புத்தகத்தையும் எழுதினார். சிறையில் இருந்து விடுதலையானபிறகு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் இறந்து 4 ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தில் மட்டும் இந்தப் புத்தகம் 100,000 பிரதிகள் விற்பனையானது.

https://tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Комментарии

Информация по комментариям в разработке