#மகாதீபம் கார்த்திகை தீபம் வழிபாடு முறைகள் | Karthigai Deepam 2024 | #கார்த்திகைதீபம் #Deepam
Join this channel :
/ @sri_diya
நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiruthalam :
• Nithra Prime 👑 | நம்ம ஊர் திருத்தலம் | Nam...
God Songs | கடவுள் பாடல்கள் :
• God Songs | கடவுள் பாடல்கள்
ஜோதிடம் அறிவோம் :
• தினம் ஒரு ஜோதிட தகவல் | An astrological in...
நித்ராவின் ஜோதிட கேள்வி பதில் :
• நித்ராவின் ஜோதிட கேள்வி பதில்
கார்த்திகை தீபம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?
கார்த்திகை தீபத்தின் ஆன்மீகமும் அறிவியலும்!
மகாதீபம்...!!
கார்த்திகை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது தீபம்தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர்.
மகாதீபம் :
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபவிழாவின் முக்கிய நிகழ்வான 'மகாதீபம்" இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமிருக்கும் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 4,500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். மகாதீபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். அதனால் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும்?
திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றி, ஒளி வடிவாக இறைவனை வழிபட வேண்டும்.
ஆண்டு முழுவதும் நாம் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான நலன்களை பெற்றுத் தரும்.
ஆண்டுதோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விளக்கேற்றி வழிபட்டாலே, தினமும் விளக்கேற்றிய பலன் கிடைத்து விடும்.
திருக்கார்த்திகை நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றிய பிறகு திருவண்ணாமலை தேவாரம், நவசிவாய திருப்பதிகம், சிவபுராணம், திருவண்ணாமலை பதிகம் போன்றவற்றை படிக்கலாம்.
சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி அளித்த நாள் மட்டுமின்றி, பார்வதிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வர ரூபமாக காட்சி கொடுத்த நாள் என்பதால் சிவபார்வதியை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்குவது சிறப்பு.
தீபம் ஏற்றிய பிறகு சொல்ல வேண்டிய மந்திரம் :
தீபம் ஜோதி பரப்பிரம்மம்
தீபம் சர்வ தமோபஹம்
தீபனே சாத்யத சர்வம்
சந்த்யா தீப நமோஸ்துதே!
இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜெபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை என சொல்லலாம்.
தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் ஒற்றுமையுடன் இல்லறம் சிறக்கும். வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வீடு, மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறலாம். இன்னல்களில் இருந்து விடுபட முடியும்.
தீபம் ஏற்றிய பிறகு பாட வேண்டிய பாடல்கள் :
உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
இதுபோன்ற சிவபெருமான் பாடல்களைப் பாடியபடியே தீபங்கள் ஏற்றுவது பல நன்மைகளை தரும்.
முக்தி கிடைக்கும்:
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகாதீபம் என மூன்றையும் கார்த்திகை தீபத்திருநாளில் ஒன்றாக பார்க்க முடியும்.
பரணி தீபம் :
கார்த்திகை தீபத்திருவிழா நாளின் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல்விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகாதீபம் :
மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
#NITHRAAURA #NithraAura #nithra கார்த்திகை தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் முறை, கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம், தீபம் ஏற்றும் முறை, கார்த்திகை தீப வழிபாடு,கார்த்திகை விரதம், கார்த்திகை தீபம் 2024, கார்த்திகை தீபம் 2024, திருவண்ணாமலை கார்த்திகை தீபம், கார்த்திகை தீபம் பலன்கள், கார்த்திகை, தீபம் ஏற்றும் எண்ணெய்கள் அதன் பயன்கள், கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை, கார்த்திகை தீபம் கொண்டாடும் முறை, கார்த்திகை தீபம் பூஜை முன் ஏற்பாடுகள், கார்த்திகை தீபம் பாடல், கார்த்திகை தீபம் # விளக்கம், கார்த்திகை வழிபாடு #கார்த்திகைவழிபாடு2024 Deepam2024 #கார்த்திகைதீபம்2024 #கார்த்திகைதீபம்பலன்கள் #கார்த்திகைதீபம்ஏற்றும்நேரம் #KarthigaiDeepam2024 #KarthigaiDeepam #Karthigai2024
Информация по комментариям в разработке