"அப்பூதியடிகள் " (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil

Описание к видео "அப்பூதியடிகள் " (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil

"அப்பூதியடிகள் " (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil

சென்னை, சோழங்கநல்லூர் அருள்மிகு பழண்டியம்மன் ஆலயத்தில் திருமந்திர நெறிக்கழகத்தால் நிகழ்த்தப்பெற்ற பெரியபுராணம் தொடர் வகுப்பில் "அப்பூதியடிகள்" (தத்துவ விளக்கவுரை) குறித்து சிவத்திரு R.ரமேஷ்குமார் ஐயா அவர்கள் ஆற்றிய தத்துவ விளக்கவுரை தொகுப்பு

சோழநாட்டுத் திங்களூரில் வேதியர் குலத்தில் அப்பூதி அடிகள் தோன்றினார். திருநாவுக்கரசரைக் கண்டறியாமலேயே அவரைக் குருவாகக் கொண்டவர். தம் வீட்டிலிருந்த உயர்திணை, அஃறிணைப் பொருள்களுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப் பெயரிட்டார். தாம் அமைத்த குளம், சாலை, தண்ணீர்ப் பந்தல் அனைத்திற்கும் அவ்வாறே பெயரிட்டார். இத்தகு நாளில் திருநாவுக்கரசர் திங்களூர் எழுந்தருளினார். திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தலைக் கண்டார். இதனைச் செய்தவர் யாரெனக் கேட்டு அப்பூதி அடிகள் மனைக்குச் சென்றார். தண்ணீர்ப் பந்தலில் உமது பெயர் எழுதாமல் வேறொரு பேர் எழுதியது ஏன் என வினவினார். செம்மைபுரி திருநாவுக்கரசர் திருப்பெயரோ வேறாரு பேர்; யார் நீவிர்? எங்குறைவீர்? என அப்பூதியார் சினந்தார். திருநாவுக்கரசன் எனும் சிறியேன் என்றார். கண்ணீர் பொழிந்தது. உரை குழறியது. மயிர்க்கூச் செறிந்தது. அரசுகளின் அடிவீழ்ந்தார் அப்பூதி அடிகள். அரசுகள் அமுதுண்ண மூத்த திருநாவுக்கரசு வாழைக் குருத்தை அரிந்து வரச் சென்றான். அங்கு பாம்பு தீண்டியது. விடத்தின் வேகம் தலைக்கேறியது. விரைந்து ஓடி வீட்டுக்கு வந்து இலையைக் கொடுத்துக் கீழே விழுந்தான். உயிர்ப் பறவை உடற் கூட்டை நீங்கியது. மகனைப் பாயில்மூடி புறமனையில் வைத்தனர். அமுதுண்ணத் தொடங்குங்கால் நாவரசர் அனைவருக்கும் திருநீறு தந்தருளினார். மூத்த திருநாவுக்கரசையும் அழைக்க என்றார். "அவன் இங்கு உதவான்" என்றனர். நாவரசர் உளம் தடுமாறியது. நிகழ்ந்தது உரைத்தனர். இறைவன் திருமுன்பு உடலை வைத்து, 'ஒன்று கொலாம்' என்னும் உயர்பதிகம் அருளினார். உறங்கி எழுவான் போல எழுந்தனன். திருமனையில் அனைவரும் திருவமுது செய்தனர். அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடி என அரசுகளும் பாடிய பெருமை பெற்றார் நாய


#periyapuranam #அப்பூதியடிகள் #Apoothiyadigal #rameshkumar #Thirumanthiranerikazhagam #bakthitv #tamilbakthi #bakthitvtamil

Комментарии

Информация по комментариям в разработке