கற்பூர கரைசல் தயாரிப்பது எப்படி? Karpoora karaisal in tamil | Karpura karaisal இயற்கை பூச்சிவிரட்டி

Описание к видео கற்பூர கரைசல் தயாரிப்பது எப்படி? Karpoora karaisal in tamil | Karpura karaisal இயற்கை பூச்சிவிரட்டி

#கற்பூரகரைசல்தயாரிப்பதுஎப்படி
#கற்பூரகரைசல்செய்வதுஎப்படி
#KarpooraKaraisalInTamil

நண்பர்களே!
கற்பூர கரைசல் என்பது இயற்கையான மூலிகை மருந்து ஆகும். கற்பூர கரைசல் அனைத்து வகையான பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுகிறது. மேலும் மிக சிறந்த பயிர் ஊக்கியாகவும் செயல் படுகிறது. பூக்கள் வருவதற்க்கு காரணமான ஹார்மோன்களை  கற்பூர கரைசல் தூண்டுவதால் அதிகமான பூக்கள் உண்டாகி அதிக மகசூலை குடுக்கும்.

செய்முறை:
10 liter டேங்குக்கு தேவையான அளவு

 Ø  நாட்டு பசுவின் கோமியம் --.1/2 லிட்டர் 
Ø  வேப்பெண்ணெய்  -- 25 ml to 40 ml.
Ø  கிளிஞ்சல் சுண்ணாம்பு --10 கிராம்.
Ø  மஞ்சள்தூள் -- 10 கிராம்.
Ø  கட்டி கற்பூரம் -- 5 கிராம்.
Ø  நீலகிரி தைலம் -- 5 ml
Ø  சீயக்காய் பொடி --10 கிராம்
 
 கட்டி  கற்பூரத்தை, நீலகிரி தைலத்தில் சேர்த்தால், கற்பூரம் கரைந்து, நீர்ம நிலைக்கு வந்துவிடும். சீயக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். சீயக்காய் கரைசலை, வேப்பெண்ணெய்யுடன் சேர்த்து கலக்கும் போது, வேப்பெண்ணெய் படலமாக தண்ணீரின் மீது மிதக்காமல், தண்ணீரோடு நன்கு கலந்துவிடும்.
 
 கோமியத்துடன் மஞ்சள்தூள், சுண்ணாம்பு, சீயக்காய் கரைத்த வேப்பஎண்ணெய்  கரைசல் மற்றும் நீலகிரி தைலத்துடன் சேர்க்கப்பட்ட கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி பயன்படுத்தவும்.
 
 இம்முறையில் தயாரான கற்பூர கரைசலை 10 லிட்டர் டேங்க்கிற்கு நீர் கலந்து தெளிக்கவும்.

குறிப்பு  :
 கற்பூர கரைசலை தேவைப்படும்போது, செய்து பயன்படுத்தவும்.
சேமித்து வைத்து பயன்படுத்த கூடாது .
 
இளம் செடிகளுக்கு 25 ml  வேப்பெண்ணெய்யும், மத்திய கால செடிகளுக்கு 30 ml வேப்பெண்ணையும், வளர்ந்த செடிகளுக்கு 40 ml வரை பயன்படுத்தலாம்.
40 ml  அளவு தாண்டாமல் தெளித்தால் நல்லது 

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது இந்தக் கரைசல் அனைத்து பூக்கள் சாகுபடிக்கும் பயிர்களில் பூச்சிகள் அனைத்தும் கட்டுப்படுத்துவதோடு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது கத்தரி பயிரில் தண்டுத் துளைப்பான் காய்த்துளைப்பான் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Subscription animation credit:

https://m.youtube.com/www.youtube.com...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Background Music credit:
Harmony by Ikson   / ikson​   Music promoted by Audio Library    • Harmony – Ikson (No Copyright Music)  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Комментарии

Информация по комментариям в разработке