Dietrich Bonhoeffer - Short Biography - Tamil - டீட்ரிஷ் போன்ஹோஃபர்

Описание к видео Dietrich Bonhoeffer - Short Biography - Tamil - டீட்ரிஷ் போன்ஹோஃபர்

டீட்ரிஷ் போன்ஹோஃபர் (1906 - 1945) - சிந்தனையாளர், போதகர், இறையியலாளர், நாசி எதிர்ப்பாளர், ஜெர்மனியில் உள்ள கன்ஃபெசிங் சர்ச்சின் முக்கிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவர், இரத்தசாட்சி. அவருடைய எழுத்துக்களுக்கு இன்று மக்களிடையே பரவலாக வரவேற்பும், செல்வாக்கும் உண்டு. அவருடைய "The Cost of Discipleship" என்ற புத்தகம் தரமான இலக்கியமாகக் கருதப்படுகிறது.
இறையியல்சார்ந்த அவருடைய எழுத்துக்கள் ஆழமானவை. அவர் ஹிட்லரின் கருணைக்கொலைத் திட்டத்தையும், யூதர்களின் இனப்படுகொலையையும் கடுமையாக எதிர்த்தார். நாஜி சர்வாதிகாரத்தைக் கடைசிவரைப் பகிரங்கமாக எதிர்த்தார். அவர் ஏப்ரல் 1943 இல் கெஸ்டபோவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அடால்ஃப் ஹிட்லரைப் படுகொலை செய்வதற்கான ஜூலை 20 சதித்திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டபின்னர், அவர் மிக விரைவாக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 3 வாரங்களுக்குமுன்பு ஏப்ரல் 9, 1945 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.

https://tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Комментарии

Информация по комментариям в разработке