திருச்செந்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் அவஸ்தை | Tiruchendur temple | Devotees suffering

Описание к видео திருச்செந்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் அவஸ்தை | Tiruchendur temple | Devotees suffering

திருச்செந்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் அவஸ்தை | Tiruchendur temple | Devotees suffering | Basic fecilities | Thoothukudi |

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்குகிறது.

சூரனை வதம் செய்த இடமான இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர்.

சமீப காலமாக மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி வழிபடுகின்றனர்.

பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது,

திருப்பதிக்கு இணையாக திருச்செந்துாரை மாற்றுவதாக கூறி, இந்து சமய அறநிலையத்துறை, ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 300 கோடி ரூபாய்க்கு பெருந்திட்ட வளாக பணிகள் நடக்கின்றன.

ஹெச்.சி.எல் நிறுவனம் மட்டும் 200 கோடி ரூபாய் உபயமாக வழங்கியது.

பெருந்திட்ட வளாகத்தில் பக்தர்கள் ஓய்வறை, காத்திருப்பு அறைகள், அன்னதான மண்டபம், கல்யாண மண்டபம், கலையரங்கம், முடி காணிக்கை மண்டபம் என, பல கட்டுமானங்கள் நடக்கின்றன.

இதற்காக கோயில் வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டுமான பணி ஜரூராக நடக்கிறது.

கோயில் வளாகத்தில் இருந்த விடுதிகள், 2017ல் அகற்றப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக, யாத்ரீகர்கள் நிவாஸ் விடுதிகள் கட்டப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

பர்னிச்சர் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளுக்காக நிதியில்லாமல் அப்பணிகள் தொய்வாக நடக்கின்றன.

அறநிலையத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே யாத்ரீகர்கள் நிவாஸ் விடுதிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இது ஒருபுறம் இருக்க, பழைய கழிப்பறைகள், குளியலறைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

இதனால் கோயில் வளாகத்தில், ஆங்காங்கே பக்தர்கள் குளிக்க தண்ணீர் தொட்டிகள், சிறிய அளவிலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, இந்த சொற்ப எண்ணிக்கையிலான கழிப்பறைகள் போதுமானதாக இருப்பதில்லை..

வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோயில் வளாகத்தில் போதிய இடமில்லாத நிலையும் உள்ளது.

வெளியூர் வாகன ஓட்டிகள் எங்கே நிறுத்துவது என தெரியாமல், ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போலீசாரால் அபராதம் விதிக்கப்படுகிறது.

கோயில் பெருந்திட்ட வளாக பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி, நகரத்தை அப்படியே விட்டு விட்டனர்.

கோயிலுக்கு செல்லும் வாகனங்களை ஊருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பக்தர்கள் படும் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.#Tiruchendurtemple #Devoteessuffering #Basicfecilities #Thoothukudi

Комментарии

Информация по комментариям в разработке