Cement, ஜல்லி, கம்பி எதுவும் கிடையாது- 25% குறைந்த விலையில் இயற்கை வீடு | Heritage | House | Culture

Описание к видео Cement, ஜல்லி, கம்பி எதுவும் கிடையாது- 25% குறைந்த விலையில் இயற்கை வீடு | Heritage | House | Culture

Cement, ஜல்லி, கம்பி எதுவும் கிடையாது- 25% குறைந்த விலையில் இயற்கை வீடு | Heritage | House | Culture

#CulturalHouse #Heritagehouse #Housewithoutconcrete #Mayiladuthurai #tamilnad

மனிதன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வீட்டில் தான் செலவிடுகிறான். மனிதன் தான் வாழ்ந்த வீட்டை அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக விட்டுச் செல்ல விரும்புகிறான். அதனால்தான் தான் கட்டும் வீட்டை ஏதாவது ஒரு தனித்துத்தோடு கட்ட விரும்புகிறோம். அவ்வாறு ஒரு தனித்துத்தோடு இயற்கையோடு ஒன்றிய வீட்டை, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த
,நிம்மேலி கிராமத்தை சேர்ந்த இளம் இயற்கை விவசாயியான சுதாகர் தனது வீட்டை வடிவமைத்துள்ளார்.

மனிதன் இயற்கையை நேசித்து, இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்றும், நாம் இயற்கையை நேசித்தால், இயற்கை நம்மை நேசிக்கும் என்ற கோட்பாட்டாளரும், 'நலம்' பாரம்பரிய விவசாய அறக்கட்டளையின் செயலாளரான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் கொள்கையினை பின்பற்றி, பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கவும், மீண்டும் முழுமையான இயற்கை விவசாயத்தை நிலைநாட்டவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக தனது வீட்டினை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முறையில் கட்டியுள்ளார். தற்போதைய கட்டிட வேலைசெய்ய இன்றியமையாத மூலப்பொருட்களான சிமெண்ட், ஆற்று மணல், கம்பி உள்ளிட்ட எந்த ஒரு பொருட்களும் 80 சதவீதம் இன்றி 1200 சதுர அடியில், மூன்று படுக்கை அறைகளுடன் கட்டியுள்ளார்.

பாரம்பரிய முறையில் வீடு கட்ட முடிவெடுத்த சுதாகர், பல்வேறு தரவுகளை மேற்கொண்டுள்ளார். வீட்டை கட்டுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணியாட்கள், செங்கற்கள், கருங்கற்கள், சுண்ணாம்பு போன்ற பொருட்களை வர வைத்துள்ளார். வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கம்பிக்கு மாற்றாக, சுண்ணாம்பு, பனை வெல்லம், கடுக்காய் போன்ற பொருட்களை தானே தயார் செய்து தனது கனவு இல்லத்திற்கான செயல் வடிவத்தை கொடுத்துள்ளார் சுதாகர்.

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் மணல் தட்டுப்பாட்டால், எந்த ஒரு பாதிப்புமின்றி தனது வீட்டிற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு, மணலைக் கொண்டு சேறு கலவையை உருவாக்கி, சிமெண்டைவிட பல மடங்கு வலுவான கட்டிடத்தை உருவாக்கியுள்ளார் சுதாகர்.

கம்பி கொண்டு சென்ட்ரிங் அடித்து சிமெண்ட், ஜல்லி, மணல் குழைத்து அமைக்கும் மேல்கூறையை கண்ட பலருக்கும், பனை மரத்து கட்டைகளை குறுக்கே வைத்து அதன் மீது செங்கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட மேற்கூரை, பலரையும் வியப்படைய செய்கிறது.

பழமையும், பாரம்பரியமும் மாறாது கலைநயத்துடன் உருவாகும் இந்த வீ்டு,
தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் என்கிறார். வீட்டினுள் வைக்கப்படும் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்ட இவ்வீடு மற்ற வீடுகளைக் காட்டிலும் 25 சதவீதம் குறைந்த செலவில் வடிவமைக்கலாம் என்றும், இந்த வீட்டின் மற்றொரு சிறப்பாக ஜன்னல் அரிகால் உள்ளிட்ட மர வேலைகள் செய்யப்பட்ட இடத்தில் தாமரை மற்றும் வாழை இலைகள் வைத்து கட்டப்பட்டுள்ளதால், மரங்களை கரையான் போன்ற பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்றும் கூறுகிறார். இவ் வீட்டினை பல நூறு ஆண்டுகள் கழித்து பிரித்தெடுத்து, மீண்டும் கற்கள் ஜன்னல் கதவுகள் போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தலாம் என்றும் பெருமையுடன் கூறுகிறார் இயற்கை விவசாயியான சுதாகர்.

CREDITS:
Reporter: Jagan
Editing: Vivekanandan
Voice Over: Arunmozhivarman

வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...

Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language

ABP Nadu website: https://tamil.abplive.com/

Follow ABP Nadu on,
  / abpnadu  
  / abpnadu  
  / abpnadu  

Комментарии

Информация по комментариям в разработке