இந்த வீடியோ பற்றி
சம்ஸ்கிருத வார்த்தைகளை எளிதாக கற்றுக்கொள்ளுங்கள்!
அன்னபூர்ணா ஸ்தோத்திரத்தின் ஸ்லோகம்-1 பாராயணம் செய்யப்பட்டு விளக்கப்படுகிறது.
நேர முத்திரைகள்
0:00 அறிமுகம்
0:10 காசியில் உள்ள அன்னபூர்ணா தேவி கோவில் பற்றி
02:26: அன்னபூர்ணா ஸ்தோத்திரம் - ஸ்லோகம் 1 பாராயணம்
03:44: ஸ்லோகத்தின் பொருளின் சுருக்கம் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம்
04:34: சம்ஸ்கிருத வார்த்தைகள் கற்கவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் - ஸ்லோகம் 1
அன்னபூர்ணா தேவி, துர்க்கை அதாவது பார்வதியின் அவதாரம். அவளே அனைத்து உயிரினங்களுக்கும் அளவற்ற, முழு ஊட்டத்தை அளிப்பதன் மூலம், உலக முழுவதும் வாழ்வை நிலைநிறுத்துகிறாள். அன்னம் என்பது: உணவு; பூர்ணா என்றால்: முழுமையான, நிறைந்த. அன்னபூர்ணா தேவி, முழுமையான ஊட்டத்தை அளிப்பவள்.
பொது சகாப்தத்தின் 8 ஆம் நூற்றாண்டில், ஆதி சங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதன் நோக்கம், மாதா அன்னபூர்ணேஶ்வரியை நம் எல்லோருக்கும், உலக முழுவதும், உணவு, செழிப்பு, செல்வம், ஞானம் ஆகியவற்றை வாரி வழங்க வேண்டிக்கொள்வதே ஆகும்.
அவள் ஆதி சங்கராச்சாரியாரால் 'காசிபுராதீஶ்வரி' என்று, அதாவது காசியின் அதிபதி என்று போற்றப்படுகிறாள்.
அன்னபூர்ணா தேவிக்கு இந்தியா முழுவதும் பல கோயில்கள் இருந்தாலும், அவற்றில் மிகவும் பிரபலமானது வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளதாகும். ஆதிசங்கரர் காலத்தில் இருந்த கோவில் என்னவோஅழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய கோவில் 1729 ஆம் ஆண்டு மராத்தா தலைவரான பேஷ்வா முதலாம் பாஜி ராவ் என்பவரால் கட்டப்பட்டது. அன்னபூர்ணா அன்னையின் விக்கிரகம் திடமான தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
காசி கோயிலில் இருந்து திருடப்பட்டு, கனடாவுக்குக் கொண்டு செல்லப்பட்டஅன்னபூர்ணா தேவியின் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிற்பம் (மூர்த்தி) ஒன்று, கனடா அதிகாரிகளால் நவம்பர் 2020 இல் திருப்பி அனுப்பப்பட்டு கோயிலில் மீண்டும் நிறுவப்பட்டது.
விளக்கப்பட்ட சிறப்பு சமஸ்கிருத வார்த்தைகள்
आकर: – ஆகர: , पावनम् – பாவனம், पावन – பாவன
இதே போன்ற வீடியோக்கள்
அம்பாள் பற்றி: • அம்பாள், சக்தி, பார்வதி, துர்க்கை
மற்ற ஸ்லோகங்கள்: • ஶ்லோகங்கள்,ஸ்தோத்ரங்கள்
எல்ல வீடியோக்களும்: • தமிழில் விளக்கம்
இந்த சேனல் பற்றி (தயவு செய்து பதிவு - ஸப்ஸ்க்ரைப் - செய்யவும்: ஏற்கனவே செய்யவில்லை என்றால்)
சம்ஸ்கிருத வார்த்தைகளை எளிதாக கற்றுக்கொள்ளுங்கள்!
/ dailysamskritham
சம்ஸ்கிருத வார்த்தைகளின் பிரயோக அர்த்தங்களை - தினசரி பயன்பாட்டில் அல்லது நமது உன்னதமான சனாதன தர்மம் அல்லது சம்ஸ்கிருதி (கலாச்சாரம்) தொடர்பானவற்றை - அறிய இந்த சேனல் உங்களுக்கு உதவும்.
எவ்வாறு? ஸ்லோகங்கள், ஸ்துதிகள், மந்திரங்கள், கீர்த்தனைகள், கீதங்ககள், சுபாஷிதங்கள் ஆகியவை, ஒலியுடன் கூடிய காணொளி மற்றும் உரை (text) மூலம், ஆங்கிலம் மற்றும் தமிழ் (தமிழ்) ஆகிய 2 மொழிகளில் விளக்கப்படும்.
மேலும், நமது சமயநூல்கள், தெய்வங்கள், ஆசிரியர்கள், கோவில்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றின் மூலம்.
சமஸ்கிருதம் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகும். தேவபாஷை அல்லது கடவுளின் மொழி என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கில பிளேலிஸ்ட்கள் இங்கே: • Explained in English
Информация по комментариям в разработке