குமரிக்கண்டம் Kumarikandam Full song | Orissa balu | கடல் கொண்ட தென்னாடு|வரதராஜப்பெருமாள் பாண்டியன்

Описание к видео குமரிக்கண்டம் Kumarikandam Full song | Orissa balu | கடல் கொண்ட தென்னாடு|வரதராஜப்பெருமாள் பாண்டியன்

#blackrock #Pandion #Malayathuvasapandion #kumarikandam #குமரிமாவட்டம் #குமரி #தமிழ் #tamil #tamilsong #tamilnews
இசை: ஜெர்சன்
பாடகி: தஞ்சை. அபி
பாடலாசிரியர்: வசந்த் வெள்ளைத்துரை


பல்லவி

BLACK ROCK PANDION

வடிவேல் எறிந்த வான் பகையே
மலை காசி ஆனந்தி பிரிந்தனவே
கடலில் மூழ்கிய திருமால் தீவு
இதுவே கடல் கொண்ட தென்னாடு

தெற்காசிய நாட்டில் ஓடும் பஃறுளி ஆறு
சேரமான் நாட்டில் நீளும் படுமலை காடு

சோணாட்டில் கல்லணை கட்டிய வேங்கை கொடியனே
வடகிழக்கில் கங்கையும் இமயமும் கொண்ட ஈசானே

தென்திசை ஆண்ட தென்னவனே
குமரிக்கண்ட பாண்டியனே..
உருமாறிய கடல் விளங்கிய தீவாய் மாறிய கண்டம்
குமரிக்கண்டம் இதுவே குமரிக்கண்டம்..

பால்க் சந்தி பாடக சந்தி பாடக புரம் கபாடபுரம்
இதுதான் கரை கபாடபுரம் கரையூரு முயல் தீவு

சரணம் 01

தென்மதுரை முற்றூரு தலைநகரம் கொண்டு
ஏழ்ஏழு நாடும் ஏழு ஆறும் இங்கு உண்டு

வேல் மயில் சேவல் என கதையை கொண்டு
வடிவேல் பிளந்த மாமரமும் நாடு இரண்டு

சூரியன் தரணி நதி கிருட்ணன் அவன்
வெள்ளி குடிலை நதி வைகை கண்ணன்
குறத்தி சிங்கை நதி கங்கை அவள்
சேந்து சுமனை நதி சிந்து இவள்

பார்வதி உமை நதி காவிரி
நெல்லி சிவை நதி ஆனந்தி
மகளான குமரி நதி கோமதி

இடமுசிறி இளமுசிறி இளமுசிறியா இளமுறியா
இது தான் இடது முசிறி இலமூரியா முரிசிய தீவு



சரணம்02

மாந்தையும் இமயமும் மயன்மலையாய் மாறிப்போனது அங்கு
மேரு மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையாய் நீளும் இங்கு

நெய்தல் திணையில் வேலம் பூவை சூடிக்கொண்டு
கடலில் மக்களை மீனவன் காத்தான் வேலன் என்று
கடலில் மக்களை மீனவன் காத்தான் வேலன் என்று

பருத்தினவதானியம் ஏழ் முன் பாலிகை நாட்டில்
ஆயுத உருக்கு ஆலை ஏழ் பின் பாலிகை நாட்டில்
குணக்கார நாட்டில் ஏழு குலக்கல்வி சாலை கூடம்
கொன்றை வேந்தன் சேர நாட்டில் ஏழு குன்று கோட்டம்

ஈழங்கை திசையில் ஏழு குறும்பனை காடு
மேற்கில் லட்சுமி தீவில் ஏழ் தென்னை நாடு
தென்மேல் துறைமுகங்கள் தீவு
இதுவே ஏழு தென் மதுரை நாடு
தென்மேல் துறைமுகங்கள் தீவு
இதுவே ஏழு தென் மதுரை நாடு

உருமாறிய கடல் விழுங்கிய தீவாய் மாறிய கண்டம்
குமரிக்கண்டம் இதுவே குமரிக்கண்டம்

Комментарии

Информация по комментариям в разработке