1.5 லட்சம் நாட்டு வகை மரம் இலவசமாக வழங்கும் வனத்துறை

Описание к видео 1.5 லட்சம் நாட்டு வகை மரம் இலவசமாக வழங்கும் வனத்துறை

தமிழக அரசால் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அடுத்த10 ஆண்டுகளில் தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 23.98 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிப்பது தான். இதற்காக நாட்டு வகை மரங்கள் வனத்துறையால் வளர்க்கப்பட்டு வருகிறது. நாட்டு மர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும்,அந்த பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும், திகழ்வதால் அதிக அளவில் நாட்டு மரங்கள் நடுவது ஊக்குவிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் வனத்துறையின் சார்பில் வன விரிவாக்கம் மையத்தில் இந்த ஆண்டு 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #greentnmission #greentamilnadu #carbon #emission #forest #plantation #cm #ecosystem #wetland #former #coimbatore #annur #mettupalayam

Комментарии

Информация по комментариям в разработке