Thiruchendur low budget stay Rs.100 for one day l Travel vlog

Описание к видео Thiruchendur low budget stay Rs.100 for one day l Travel vlog

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகியவை உள்ளன.
இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது.

படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பெயர் காரணம்:
சூரபத்மனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'ஜெயந்திநாதர்' என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்' என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் 'திருசெயந்திபுரம்' என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாகச் சொல்லப்படுகிறது.
சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாகச் சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்பட்டதாம்.

கோயில் அமைப்பு: முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.

கோயில் அமைப்பு:

முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார். முருகனின் பின் புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது. அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.

இரு முருகன் :

சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கின்றார். அவரின் தவத்தை கலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கென்று தனி பிரகாரம் கிடையாது. மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம்

ஆவணித் திருவிழா

கந்த சஷ்டி விழா (7 நாட்கள்) - சூரசம்ஹாரம்

மாசி திருவிழா (12 நாட்கள்)

குழந்தை வரம் அருளும் முருகன் :
வைகாசி விசாகத்தின் போது கடுமையாக நோன்பு வைத்து காவடி, பால்குடம், அபிஷேகம் போன்றவற்றை இறைவனுக்கு படைக்கின்றனர். தங்க தேர் ஊர்வலம், சந்தனா காப்பு, அபிஷேகங்கள் செய்து வருகின்றனர்

பக்தியுடன் முருகப்பெருமானை அபிஷேகம் செய்து வணங்குவதன் மூலம் தங்கள் மனக் கவலைகளிலிருந்து விடுபட முடியும் என நம்புகின்றனர்

கந்த சஷ்டி விரதம் இருப்பதால் திருமணமாகாதவர்கள் திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் அருள்மிகு சுப்பிரமணியா சுவாமியின் கிருபையால் குழந்தை பேறும் கிடைப்பதாக நம்புகின்றனர்

நாழிக் கிணறு :
நாழிக் கிணற்றுக்கும் சூரசம்ஹாரத்துக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகன் தனது கோபத்தைத் தணிக்க தனது வேலால் வேகமாக தரையை குத்த, பீரிட்டு வந்த நீர்தான் நாழிக் கிணற்றில் இருப்பதாக நம்பிக்கை

சூரபதுமனுடனான போரின் போது திருச்செந்தூரில் முகாமிட்டு தங்கியிருந்த போர் வீரர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக முருகன் தனது வேலால் இந்த கிணறை உருவாக்கினர் என்றும் கூறப்படுகிறது

கடல் பரப்பை விட கீழ் இருக்கும் இந்த நாழிக் கிணற்றில் ஊறும் நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்டதாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருள்கின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக்கல்யாணத்தின்போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள்

New videos :
   • NEW VIDEOS  

Kanakkanpatti Mootai Swamy Videos :
   • Kanakkanpatti Swamy Videos COLLECTION  

DRIVING TIPS VIDEOS :
   • Scooty Driving TIPS For Ladies  

Reviews Of Vehicles :
   • Reviews Of Vehicles  

#thiruchendurmurugantemple #tiruchendur #thiruchendur #thiruchendurtemple

Комментарии

Информация по комментариям в разработке