புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இயற்கை விவசாயி, நெல் ஜெயராமன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள, கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், நெல் ஜெயராமன், 50. இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் வழியை பின்பற்றி, 'நம் நெல்லை காப்போம்' என்ற, அமைப்பை துவக்கினார். விழிப்புணர்வுபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பத்தினார்.
பாரம்பரிய நெல் ரகங்களை, தன் நிலத்தில் பயிரிட்டு, தலா, 2 கிலோ வீதம், இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்தார். அவரிடம் நெல் விதைகளை பெற்ற விவசாயிகள், அடுத்த ஆண்டு களில், நான்கு கிலோ நெல்லை திருப்பி கொடுத்தனர்.இதுவரை, ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 174 நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளார்.
சிறந்த இயற்கை விவசாயிக்கான, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.இரண்டு ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை இறந்தார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின், தமிழிசை, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் நடிகர்கள் கார்த்திக், சூரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் இரங்கல்மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், நேற்று பிற்பகல், 2:00 மணியளவில், நெல் ஜெயராமனின் உடல், இறுதி சடங்கிற்காக, சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
இறந்த நெல் ஜெயராமனுக்கு, சித்ரா என்ற மனைவியும், சீனிவாசராம் என்ற மகனும் உள்ளனர்.மீட்டெடுத்த 174 பாரம்பரிய நெல்ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகத்தையும் சேகரித்து, அதன் பெயர், அதற்கான காரணம், அதன் தன்மை, எந்த பகுதிக்கு ஏற்ற சூழல், அந்நெல்லின் சிறப்பு ஆகியவற்றை, பதிவு செய்துள்ளார். அந்நெல்லை முறையாக உற்பத்தி செய்து, பெருகச் செய்தார்.அவர் மீட்டெடுத்த, 174 நெல் ரகங்களில் சில:அன்னமர்கி, முற்றுசன்னம், குடவார், காட்டுயாணம், கருப்பஞ்சீரக சம்பா, காட்டுப்பான்னி, கடலச்சம்பா, குருவிக்கார், வரப்பஞ்குடைஞ்சான், குறுவை களஞ்சியம், சம்பஞ்சம்பா, காலாநமக், பிசினி, வெள்ளை குருவிகார்.காட்டுச்சம்பா, கருங்குறுவை, காட்டுக்குத்தாலம், பாசுமதி, வாசனை சீரகச்சம்பா, இலுப்பை சம்பா, துளசி வாச சீரக சம்பா, கந்தசாலா, சன்ன சம்பா, நவரா, கிச்சலி சம்பா, கைவரச்சம்பா, தாயகச்சம்பா, நீச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டை சம்பா, ஆத்துள கிச்சலி, குந்தாவி.முற்றின் சன்னம், ஒட்டடையான், வாடன் சம்பா, காடைக்கல்புத்தான், நீலச்சம்பா, வைகுண்டா, கம்பக்காளி, கலியன் சம்பா, அடுக்கு நெல், சாரக்குறுவை, வாலான், பயகுண்டா, மதிமுனி, ரசகடம், கல்லுருண்டையான், காட்டு வாணிபம், சம்பா, மரநெல், கல்லுண்டை, கார் நெல், ராகமல்லி, சூடாநெல், சித்த சன்னா, கட்கா, மிளகி உட்பட, 174 ரகங்களாகும்.இவை, பல்வேறு பகுதிகளில் தற்போது பாதுகாத்து, தொடர்ந்து பயிரிடப்படுவது, அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்
Please Like our Facebook Page: / informationwelfareorg
Информация по комментариям в разработке