வணக்கம் 🙏
எங்கள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் 🌹
" சிறகை வரி சிகரம் தொடு " மகளிர் அமைப்பில் 23.1.25 மகளிர் மற்றும் மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1."சிவப்பு கிரகம்" என்று அழைக்கப்படும் கிரகம் எது?
பதில் - செவ்வாய்.
2. உலகின் மிகப்பெரிய பாலூட்டி எது?
பதில் - நீல திமிங்கலம்.
3.சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் யார்?
பதில் - நீல் ஆம்ஸ்ட்ராங்.
4.பென்சிலின் கண்டுபிடித்தவர் யார்?
பதில் - அலெக்சாண்டர் ஃப்ளெமிங்.
5.இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண் யார்?
பதில் - மேரி கியூரி.
6.திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?
பதில் - கிமு 31
7.திருக்குறள் —- கரத்தில் தொடங்கி —- கரத்தில் முடிகிறது?
பதில் - அ, ன
8.நான்முகனார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
பதில் - திருவள்ளுவர்
9.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
பதில் - அன்னை தெரசா,
10.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
பதில் - ஜனவரி 3,
இவ்வாறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்த ஆசிரியர் சசிகலா நாகராஜன், மலேசியா நாட்டைச் சார்ந்த ஆசிரியர் ஶ்ரீ, கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஆசிரியர் வே.புவியரசி, பெண்ணாடம் வரலட்சுமி தமிழ்ச்செல்வன், சுஸ்மிதா சிவக்குமார், ஆசிரியர் கவிதா அசோகன் திருச்சி ஆகியோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் ,
மாணவர் உலகம் பகுதியில் நான்கு முதல் உள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகள்
1.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
கர்ணம் மல்லேஸ்வரி
2.நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
பதில் - ரவீந்திரநாத் தாகூர்
3.இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பழமையான நாகரீகத்தின் பெயர் என்ன?
பதில் - சிந்து சமவெளி நாகரிகம்
4.தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? இந்த நபர் கரும்புகளை இனிமையாக சுவைக்கச் செய்தார்.
பதில் - ஜானகி அம்மாள்
5. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
பதில் - 206
6.வைட்டமின் பி12 இன் எளிதில் கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் யாவை?
பதில் - பால், முட்டை, மீன், கொட்டைகள், பருப்பு வகைகள், சிவப்பு இறைச்சி போன்றவை.
7.கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்?
பதில் - டிமிட்ரி மெண்டலீவ்
8.பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது எது?
பதில் - கால்சியம் கார்பைடு
9.வைரம் எந்த தனிமத்தால் ஆனது?
பதில் - கார்பன்
10.சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?
பதில் - நைட்ரஸ் ஆக்சைடு
இதில் த.அபிநிலா ஆறாம் வகுப்பு, ச.அனு ஶ்ரீ, ஏழாம் வகுப்பு, து.மு புனிதன் ஆறாம் வகுப்பு, S.செவியா, ஏழாம் வகுப்பு, வே, ஆசிகா, ஏழாம் வகுப்பு, ச.யஷ்வந்த், நான்காம் வகுப்பு விடையளித்து சான்றிதழ் பெற்றனர்
யூகேஜி முதல் மூன்றாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகள்
1.ஒரு வாரம் என்பது எத்தனை நாட்களைக் கொண்டது?
பதில்: ஏழு
2.ஒரு வருடம் என்பது எத்தனை நாட்களைக் கொண்டது?
பதில்: 365
3.வானவில் எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
பதில்: 7
4.பாலைவனத்தின் கப்பல்' என்று அழைக்கப்படும் விலங்குக்கு பெயரிட முடியுமா?
பதில்: ஒட்டகம்
5.ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
பதில்: 26
6.ஒரு முக்கோணத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?
பதில்: மூன்று
7.சூரியன் எந்த திசையில் உதிக்கிறார்?
பதில்: கிழக்கு
8.தண்ணீர் பொதுவாக இனிப்பா அல்லது உப்பா?
பதில்: தண்ணீர் சுவையற்றது
9.ஒரு கையில் எத்தனை விரல்கள் உள்ளன?
பதில்: 5 விரல்கள்
10.எந்த நிறம் "G" என்ற எழுத்தில் தொடங்குகிறது?
பதில்: பச்சை
11.எண் 5 க்குப் பிறகு என்ன வரும்?
பதில்: எண் 6
12. "C" என்ற எழுத்தில் தொடங்கும் ஆங்கில சொற்கள் மூன்று கூறு?
பதில்: 🚗 🚗 car, 🐪 🐪 🐪 camel, 🐈 🐈 🐈 cat.
13.ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
பதில்: 12 மாதங்கள்
14.2+2 எத்தனை ?
பதில்: 4
15.வெள்ளிக்கிழமைக்குப் பிறகு எந்த நாள் வரும்?
பதில்: சனிக்கிழமை
இக் கேள்விகளுக்கு,
வெ.ச.வெங்கட் சாய், இரண்டாம் வகுப்பு, வே.அவந்திகா, மூன்றாம் வகுப்பு, வே.அரிவேல் ஶ்ரீ, இரண்டாம் வகுப்பு மூவரும் விடையளித்து சான்றிதழ் பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கடலூர் மாவட்டம், பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், மற்றும் கிட்ஸி மழலையர் பள்ளி இணைந்து சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தியது.
நன்றி, வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 🌹🌹🌹
பாவலர்மணி நிறைறமதி நீலமேகம், B.Lit., M.A.,M.Phil., D.Pri.Ed.,
Информация по комментариям в разработке