அதிவேக பலன் தரும் வேல் மாறல் பாராயண வரிகளுடன்|Vel maaral song with tamil lyrics|Murugan bhakthi song

Описание к видео அதிவேக பலன் தரும் வேல் மாறல் பாராயண வரிகளுடன்|Vel maaral song with tamil lyrics|Murugan bhakthi song

#vel #velmaaral #murugansongs #muruganbakthipadal #hindhudevotionalsongs #devotionalsongs #muruganmanthiram

முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும். எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை காலை, மாலை இருவேளையுமோ அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையோ தொடர்ந்து கூறி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும். இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எந்த குறை தீர வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். குறிப்பாக வினைகளை தீர செய்து, நன்மைகளை தரக் கூடிய மந்திரம் இது.

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இந்த இதை படிப்பது சிறப்பானது. மன பயம் நீங்கி, மன நிம்மதி, மனமகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். முருகனுக்குரிய முக்கிய விரத நாட்களில் இந்த மந்திரத்தை சொல்வது பல மடங்கு அதிகமான பலனை தரும். இதை முறையாக சொல்லி வருபவர்களுக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும். நோய் தீர வேண்டும், பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை படிக்கலாம்.

Комментарии

Информация по комментариям в разработке