Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram

  • Dr S Murugu Sundram
  • 2025-05-10
  • 761
அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram
mothersdaymothers day giftloveHappy Mothers daymommotherTamil mothers day poemAmma kavithaiemotional tribute to motherDr S MurugusundramChennai Skin FoundationTamil poem on motherhoodheartfelt Amma storymother son loveAmma memoriesMother's Day Tamil contentTamil emotional writingTamil spoken wordlove for momTamil tribute video
  • ok logo

Скачать அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео அம்மா இருந்த நேரம்... உயிர்க்கும் மேலான பாசம் | Happy Mother's Day | Dr. S Murugusundram

அம்மா...அம்மா...
மருத்துவப்பணி முடித்து
மகன் வரும் வரை...

பசி பொறுத்துக் காத்திருப்பாள்
பாசத்தால் என் அன்னை...

அன்றிரவும் அப்படித் தான்...
அலுப்போடு அகம் வந்தேன்...

அம்மா... என்று நானழைக்க,
அடுப்படி விட்டு ஓடி வந்தாள்...

என்னைக் கண்டவுடன்,
இன்று தான் ஈன்ற - தன்

கன்றைக் கண்டது போல்...
இன்பப் பெருக்கு அவளுக்குள்...

அன்றலர்ந்த மலர் போல...
அவள் முகத்தில் அதீத ஆனந்தம்...

அப்படி ஒளி வீசி அவள் முகம், எப்போதும் கண்டதில்லை நான்...

என்னவென்று புரியாமல்
"என்னம்மா?" என்று நெகிழ்ந்தேன்

"ஒன்னுமில்லையே" என்றாள்...
சின்னக் குழந்தையைப் போல்...

தலைகோதி அமர வைத்து,
தலைவாழை இலை போட்டு...

எப்படித் தான் சமைத்தாளோ
எனக்குப் பிடித்த எல்லாமும்...

உணவல்ல அவள் ஊட்டியது...
உயிரும், உணர்வும் - அவள்

உதிரம் குடித்து அவள் மடி உதிர்ந்தவன்...
உதிரும் கண்ணீர் மறைத்தேன்...

அன்று நான் உண்டதெல்லாம்...
அவள் அன்பென்ற அமுதம் தான்...

எதிரமர்ந்து நான் உண்பதையே ரசித்து...
புதிராகத் தான் இருந்தது அவள் புன்னகை...

உதவிக்கு ஆளில்லை
உடல்நலமும் சரியில்லை

ஏனம்மா, இவ்வளவு சமைத்தாய்?
என்னம்மா விசேஷம் இன்று?

கல்யாண விருந்து உனக்கு... - என்
கையால் நான் செய்ய வேண்டாமா?

எவள் வருவாளோ? எப்படி சமைப்பாளோ?
என் மகனை என்னைப் போல் பார்ப்பாளோ?

"இப்பவே நல்லா சாப்டுக்க..."
அப்படி சிரித்தாள் அறை அதிர...

அன்றிரவு முழுவதும்
அதே சிரிப்பும் சீண்டலுமாய்

நள்ளிரவு தாண்டியும் அன்றிரவை அம்மா...
நல்லிரவாய் ஆக்குகிறாள்...

"உறங்க வேண்டும் அம்மா - உன்
உடல் நலம் கெட்டு விடும்" என்றேன்

மனமில்லை அவளுக்கு...
மகன் விட்டுச் செல்ல...

அரைமனதாய்த் தான் சென்றாள்...
அவள் அறைக்குள் அம்மா...

அடுத்தநாள் அதிகாலை...
அம்மாவைக் காணவில்லை...

ஓடிச் சென்றேன் அவள் அறைக்குள்...
உறங்குவது போல் அவள் இல்லை...

அதே அழகு முகம்...
ஆனந்த தியானத்தில்...

அம்மா...அம்மா...அலறினேன்... கதறினேன்...
அவள் பதிலேதும் சொல்லவில்லை...

மகிழ்ச்சியாய் இருந்தவளை நானே !!!
மரணத்துக்குள் தள்ளி விட்டேனோ?

அந்த நல்லிரவு நீண்டிருந்தால்...
அம்மா இன்றும் இருந்திருப்பாளோ?

எங்கோ இருக்கிறாள்
எனக்காக அம்மா இன்றும்...

-முருகு
-----
Follow Dr. S Murugusundram
Founder & Medical Director,
Chennai Skin Foundation & Yesudian Research Institute
-----
[mothersday, mothers day gift, love, Happy Mothers day, mom, mother]

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]