TNPSC Group 4 Result | வெளியானது www.tnpscresults.tn.gov.in & www.tnpscexams.in

Описание к видео TNPSC Group 4 Result | வெளியானது www.tnpscresults.tn.gov.in & www.tnpscexams.in

TNPSC Group 4 Result | வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
பெரிதும் எதிர்பார்க்கப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளை, www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி இருந்தனர்.

தொடர்ந்து கூடுதலாக 2 ஆயிரத்து 688 இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 8 ஆயிரத்து 932 ஆக காலி பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
குரூப்-4 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முடிவுற்று இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்றுவந்தன.

இதற்கான முடிவுகளை அதிகாரப் பூர்வ இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.

குருப்-4 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Комментарии

Информация по комментариям в разработке