ராகு கேது தோஷம் | நாக தோஷம் | களத்திர தோஷம் | Ragu kethu Thosam

Описание к видео ராகு கேது தோஷம் | நாக தோஷம் | களத்திர தோஷம் | Ragu kethu Thosam

முதலில் இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பாம்புகளை கொன்ற குற்றம் என்கிறார்கள். பாம்பு புற்றை அழித்த பாவம் என்கிறார்கள். பிறப்பு ஜாதகத்திலேயே நாகதோஷம் அமைந்து விடுவதால், இது இப்பிறவி தொடர்பான பதில் இல்லை. ஆனால் ஜாதகத்தில் நாகதோஷம் ஏற்படுவதற்கு அழுத்தமான ஒரு செய்தி இருக்கிறது. உடலுக்கு சந்திரனும், உயிருக்கு சூரியனும் காரணமாக இருக்கிறார்கள். இது பொதுவிதி. இவர்கள் இருவரும் ராகுகேதுவால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும்தான் பாதிப்பு என்று நாம் ஒதுங்கிவிட முடியாது. காரணம் நம் ஜாதகத்தில் அந்த பாதிப்பு இருக்கிறது என்றால் உடலாகிய சந்திரனோ, உயிராகிய சூரியனோ நம் அன்றாட வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். சரி... இந்த விளக்கம் எதற்காக. இதோ பதில்.

Комментарии

Информация по комментариям в разработке