மதுரை அழகர்தோசை நெய் விட்டு ஊத்தினா சும்மா கரகர மொறுமொறு டேஸ்ட்ல செம...எலும்புக்கும் வலு சேர்க்கும்

Описание к видео மதுரை அழகர்தோசை நெய் விட்டு ஊத்தினா சும்மா கரகர மொறுமொறு டேஸ்ட்ல செம...எலும்புக்கும் வலு சேர்க்கும்

#cookingchannel #dosa #traditional

மதுரை அழகர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி 3 பங்கு (250gm)
கருப்பு உளுந்து ஒரு பங்கு (75gm)
சீரகம் ஒரு டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
சுக்கு பொடி ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவைக்கு
நெய் தேவைக்கு
கடலெண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி உளுந்து இரண்டையும் இரண்டு முறை களைந்து விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக அரைக்கவும். இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசை ஊற்றும் பொழுது இந்த மாவில் ஒரு டீஸ்பூன் சீரகம் மிளகு ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்க்கவும். சுக்கு பொடி சிறிதளவு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும். கருவேப்பிலையை பொடி பொடியாக கிள்ளி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்த்து கலக்கவும். இதையெல்லாம் சேர்த்த பிறகு கரண்டியால் நன்கு கலக்கி தோசை கல்லில் நெய் எண்ணெய் இரண்டும் சம அளவில் கலந்து நான் வீடியோவில் காட்டியுள்ளது போல் ஊற்றவும். தோசைக்கல் நன்கு காய்ந்த பிறகு அடுப்பை மிகவும் குறைத்து வைத்து முறுகலாக வேகவிட்டு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். செம டேஸ்ட்ல நமக்கு அழகர் தோசை ரெடி தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அபரிதமாக இருக்கும். இதுபோன்ற பாரம்பரியமான ரெசிபிகள் என் சேனலில் நிறைய கொடுத்துள்ளேன். எனது இனிய பார்வையாளர்களே நீங்கள் அனைவரும் பார்த்து பயன் பெறுங்கள். நன்றி வணக்கம்

Комментарии

Информация по комментариям в разработке