Thirupainjeeli | திருப்பைஞீலி | திருமணத் தடை நீக்கும் வாழை பரிகாரம் | எமன் மீண்டும் பதவி பெற்ற ஆலயம்

Описание к видео Thirupainjeeli | திருப்பைஞீலி | திருமணத் தடை நீக்கும் வாழை பரிகாரம் | எமன் மீண்டும் பதவி பெற்ற ஆலயம்

Thirupainjeeli | திருப்பைஞீலி | திருமணத் தடை நீக்கும் வாழை பரிகாரம் | எமன் மீண்டும் பதவி பெற்ற ஆலயம் |
திருமணத்தடை நீக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற கல்வாழை ஸ்தல மரமாக கல்வாழை அமைந்துள்ளதால் இது ஞீலிவனம் என்று பெயர் பெற்றது அதுவே நாளடைவில் ஞீலிவனேஸ்வரர் எனவும் பெயர் பெற்றது..
அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் ஆகியோர் இத்தலத்தை புகழ்ந்து பாடியுள்ளனர் ....
ஏழு கன்னி மார்களான பிராம்மி மாகேக்ஷ்வரி கவுமாரி வைக்ஷ்ணவி வாராகி இந்திராணி சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி தவம் பூண்டனர் அவர்களின் தவத்தை மெச்சிய பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு வரம் அளித்ததுடன் வாழைமர வடிவில் அங்கு அவர்களுக்கு காட்சி அளித்தார் அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் சுயம்பு வடிவில் லிங்கமாக எழுந்தருளினார் இதனால் இத்தலம் விரைவில் தோக்ஷங்களை நீக்கி திருமண யோகம் தரும் தலமாக அமைந்துள்ளது...
திருக்கடையூரில் இறைவன் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசன் எமனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலமாக இத்தலம் கருதப்படுகிறது இதனால் இங்கு எமனுக்கு குடை வரை கோவிலாக தனி சன்னதி அமைந்துள்ளது...
சமய சுவாமிகளில் ஒருவராகிய அப்பர் சுவாமிகள் பல்வேறு சிவ தலங்களுக்கும் சென்று பாடல்கள் சிவபெருமானை போற்றி பாடல்கள் பாடி வந்தார் அவ்வாறு ஒருமுறை திருப்பைஞ்சீலியில் எழுந்தருளி உள்ள ஞீலிவனேஸ்வரரை தரிசிக்க காவிரி ஆற்றை கடந்து திருப்பராய்த்துறையில் இருந்து திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டு இருந்தார் காட்டு பாதை வழியாக சென்றதால் அவருக்கு களைப்பும் பசியும் ஏற்பட்டது.
களைப்பு மேலோங்கியதால் நடைபயனத்தின் ஓரிடத்தில் தென்பட்ட ஒரு குளிர்ந்த சோலையில் தங்கினார் தன் பக்தர் ஒருவர் களைப்புற்று இருப்பதை உணர்ந்த ஞீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் வேடம் பூண்டு பசியை போக்க கட்டுசோறுடன் அப்பர் சுவாமிகள் முன் சென்றார்...
களைப்புற்று இருந்த அப்பருக்கு கட்டமுது வழங்கி அதை சாப்பிட்டு அங்கே தடாகத்தில் உள்ள நீரை அருந்தி களைப்பாறும் படி கேட்டுக் கொண்டார்....
அப்பரும் அதை ஏற்று பசியாறி மனம் குளிர்ந்தார் அப்போது அந்தணர் வேடம் பூண்டிருந்த ஞீலிவனேஸ்வரர் அப்பரிடம் இந்த வழியாக எங்கே செல்கிறீர் என்று வினவினார் அதற்கு அப்பர் தான் திருப்பைஞ்சீலி நாதரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார்.
அதற்கு அந்தணர் வேடம் பூண்டிருந்த சுவாமிகள் நானும் அங்கே தான் செல்கிறேன் என்னை பின்தொடர்ந்து வாருங்கள் செல்லலாம் என்று கூறினார் சுவாமிகள் முன்னும் அப்பர் பின்னும் செல்ல கோவில் நுழைவாயில் சென்றவுடன் சுவாமிகள் மறைந்து விட்டார்...
இதை நினைவுப்படுத்தும் வகையில் அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாக கருதப்படும் இடத்தில் ஆண்டுதோறும் கட்டமுது விழா நடை பெறுகிறது....
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் இக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் நேரடியாக படர்வதை காண்பது இறைவனையே நேரில் காண்பது போன்ற மெய்யனுபவமாக இருக்கும் இந்த தெய்வீக அனுபவத்தை நீங்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது காண திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

தொடர்பு கொள்ள:
ராஜா சிவாச்சாரியார், 9842633907

செல்லும் வழி:

https://goo.gl/maps/3oEZ9Qw9Ua1E52117

https://gnanaprakasika.blogspot.com

Комментарии

Информация по комментариям в разработке